டெல்லியில் மீண்டும் தீவிரமடைந்த காற்று மாசு! பள்ளிகளுக்கு விடுமுறை!!

டெல்லி: கடந்த சில நாட்களாக குறைந்திருந்த காற்று மாசு மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால், மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்குப் பிறகு தலைநகர் டெல்லி காற்று மாசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு அதிகரித்திருந்ததால் முன்னதாக டெல்லியில் பள்ளி, கல்லூரிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. தீவிர நிலையில் இருந்த காற்று மாசு மெல்லக் குறைந்து மோசமான நிலைக்கு முன்னேறியதை அடுத்து, பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இருந்தபோதிலும், மாணவர்கள் முகக்கவசம் அணிந்தபடியே பள்ளிக்குச் சென்றனர். ஆனால், கடந்த
 

டெல்லி: கடந்த ‌சில நாட்களாக குறைந்திருந்த‌ காற்று மாசு மீண்டும் அதிகரித்துள்ளது‌. இதனால், மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்குப் பிறகு தலைநகர் டெல்லி காற்று மாசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு அதி‌கரித்திருந்ததால் முன்னதாக டெல்லியில் பள்ளி, கல்லூரிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. தீவிர நிலையில் இருந்த காற்று மாசு மெல்லக் குறைந்து மோசமான நிலைக்கு முன்னேறியதை அடுத்து, பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

இருந்தபோதிலும், மாணவர்கள் முகக்கவசம் அணிந்தபடியே பள்ளிக்குச் சென்ற‌னர். ஆனால், கடந்த 2 நாட்களாக காற்று‌மாசு‌ மி‌கத் தீவிரமடைந்து காற்றின் தரக்குறியீடு 45‌0 புள்ளிகளைத் தாண்டியது. இதே நிலையே இன்னும் 2 நாட்கள் நீடிக்கும் என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளதால், பள்ளிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 500 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் ‌பல்வேறு இடங்‌களில் காற்று மாசு புகைமண்டலம் போல் காட்சியளித்தது.

-வணக்கம் இந்தியா

From around the web