அமெரிக்க முதல் மாநிலம் டெலவரில் குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம்!

இந்திய குடியுரிமைச் சட்டத் திருத்தத்தையும் (CAA), தேசிய குடியுரிமைப் பதிவேட்டையும் (NRC) எதிர்த்து, இந்தியாவிலும், உலகெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்காவின் முதல் மாநிலம் டெலவரிலும் டிசம்பர் 21-ஆம் தேதியன்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஒருமித்த குரலில் “India means Unity in Diversity, don’t divide India”, “No citizenship on the basis of religion”, “Save Indian constitution, Save India”, “Reject CAA”, “Reject NRC” என்று
 

அமெரிக்க முதல் மாநிலம் டெலவரில் குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம்!ந்திய குடியுரிமைச் சட்டத் திருத்தத்தையும் (CAA), தேசிய குடியுரிமைப் பதிவேட்டையும் (NRC) எதிர்த்து, இந்தியாவிலும், உலகெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்காவின் முதல் மாநிலம் டெலவரிலும் டிசம்பர் 21-ஆம் தேதியன்று போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஒருமித்த குரலில் “India means Unity in Diversity, don’t divide India”, “No citizenship on the basis of religion”, “Save Indian constitution, Save India”, “Reject CAA”, “Reject NRC” என்று உணர்வு பூரவமாக முழக்கமிட்டனர். வெறும் உணர்ச்சி முழக்கத்தோடு நிறுத்திவிடாமல், இந்த சட்டங்களின் நுணுக்கங்களையும், அதன் பாதிப்புகளையும் விளக்கிப் பேசினர்.

“Dr. அம்பேத்கரின் தலைமையில் உருவாக்கப்பட்ட மதச்சார்பற்ற இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தையே கேலிக்குரியதாக்கிவிடும் வகையில் இந்த திருத்தம் உள்ளது. அஸ்ஸாமில் மட்டும் நடைமுறைப் படுத்தக் கோரிய தேசிய குடிமக்கள் பதிவேட்டை இந்திய அரசு இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப் போவதாகக் கூறியுள்ளது.

இந்தியா முழுவதும் நடைமுறைப் படுத்தப்படும் பட்சத்தில், முறையாகக் கோப்புகளைப் பராமரிக்கும் பழக்கமற்ற இந்தியர்களில் பல இலட்சக்கணக்கானோர் தனது சொந்த நாட்டிலேயே குடியுரிமை இழந்து அகதிகளாக முகாம்களில் அடைபடும் அவல நிலை ஏற்படும். இந்த சட்டத் திருத்தை திரும்பப் பெறவேண்டும்,” என்று போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினார்கள்.

பேச்சுரிமை மற்றும் தனி மனித உரிமைகளை உயர்த்திப்பிடிக்கும் அமெரிக்க அரசியல் சாசன சட்டத்தில் முதன்முதலாக கையெழுத்திட்டு அமெரிக்காவின் முதல் மாநிலமாக தன்னை நிலைநிறுத்திய பெருமைக்குரிய மாநிலம் டெலவர். அமெரிக்காவின் மக்களாட்சி அரசியலமைப்புக்கு வடிவம் கொடுத்த சிறப்பு பெற்ற டெலவரில் வசிக்கும் இந்தியர்கள், இந்திய அரசியலமைப்பு சட்டத்தைக் காக்க வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளார்கள்.  நீரின் உறைநிலையை ஒட்டிய கடுமையான குளிரையும் பொருட்படுத்தாது, இந்தியா முழுவதும் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக, ஒரு அடையாளப் போராட்டத்தை நடத்தியுள்ளார்கள்

எந்த தனிப்பட்ட அமைப்பும் சாராத இந்தியர்கள்,  சக இந்தியர்களுக்கு எதிராக அரசால் இழைக்கப்படும் அநீதி கண்டு பொறுக்க முடியாமல் தாமாக முன்வந்து நடத்தியுள்ள போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

– துரைக்கண்ணன், டெலவர்.

https://www.A1TamilNews.com

From around the web