லடாக்கிற்கு விரையும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் !

இந்தியா சீனா எல்லைப்பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஜூன் 15ம் தேதி இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து ராணுவ உயர அதிகாரிகள் தர்ப்பில் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சீன ராணுவம் படைகளை குவித்து இருப்பதால், இந்தியாவும் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகிற வெள்ளிக்கிழமை
 

லடாக்கிற்கு விரையும்  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் !ந்தியா சீனா எல்லைப்பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஜூன்  15ம் தேதி இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து  ராணுவ  உயர அதிகாரிகள்  தர்ப்பில் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

எனினும்  எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சீன ராணுவம் படைகளை குவித்து இருப்பதால், இந்தியாவும் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகிற வெள்ளிக்கிழமை லடாக் செல்ல ஏற்பாடுகள் நடந்து வருவதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் காயம் அடைந்து லே பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீரர்களை பார்த்து  ஆறுதல் கூறவும், எல்லை இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த பயணம் மேற்கொள்ளப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web