சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் குறித்த முடிவு! தலைமை செயலர் சண்முகம்!

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்க அரசு பல்வேறு தடுப்பு முறைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இம்மாதம் ஆகஸ்ட் 15ம் தேதி அரசு சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. வழக்கப்படி சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றி வைத்து போலீஸ் அணிவகுப்பை முதல்வர் ஏற்பார். இந்த அரசு விழாவில் அமைச்சர்கள் எம்.பி, எம்.எல்.ஏ. க்கள் , நீதிபதிகள் , உயர் அதிகாரிகள் , பொது மக்கள் என அணிதிரண்டு விழாவை
 

சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் குறித்த முடிவு! தலைமை செயலர் சண்முகம்!மிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்க அரசு பல்வேறு தடுப்பு முறைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இம்மாதம் ஆகஸ்ட் 15ம் தேதி அரசு சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது.

வழக்கப்படி சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றி வைத்து போலீஸ் அணிவகுப்பை முதல்வர் ஏற்பார். இந்த அரசு விழாவில் அமைச்சர்கள் எம்.பி, எம்.எல்.ஏ. க்கள் , நீதிபதிகள் , உயர் அதிகாரிகள் , பொது மக்கள் என அணிதிரண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவர்.

ஆனால் தற்போது அசாதாரண நிலை நீடித்து வருவதால் சுதந்திர தின விழாவை , உரிய சமூக இடைவெளியை கடைப்பிடித்து கொண்டாடும்படி மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலர் சண்முகம் தலைமையில் நடத்தப்பட்டது. அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி வழக்கத்தை விட 50 சதவீதம் குறைவாக , விருந்தினர்களை வைத்து நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது.

கவர்னருக்கு ஏற்பட்டுள்ள கொரோனாத் தொற்று காரணமாக சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web