சும்மா கிழி-க்கும் தர்பார் படப்பாடலின் சாதனை!

ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படத்தின் முதல் பாடல் ஒரு கோடி பார்வைகளை கடந்துள்ளது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்ற “இனிமே நான் தாண்டா” என்ற பாடலை நேற்று முந்தினம் வெளியிட்டனர். விவேக் எழுதியுள்ள அந்தப் பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். பஞ்ச் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அந்தப் பாடல் இசை குறித்து சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக முதல் 24 மணி
 

சும்மா கிழி-க்கும் தர்பார் படப்பாடலின் சாதனை!ஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படத்தின் முதல் பாடல் ஒரு கோடி பார்வைகளை கடந்துள்ளது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற  “இனிமே நான் தாண்டா” என்ற பாடலை நேற்று முந்தினம் வெளியிட்டனர். விவேக் எழுதியுள்ள அந்தப் பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். பஞ்ச் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அந்தப் பாடல் இசை குறித்து சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதன் காரணமாக முதல் 24 மணி நேரத்தில் 80 லட்சம் பார்வைகளை கடந்த தர்பார் பாடல் தற்போது ஒரு கோடி பார்வைகளை கடந்து சாதனைப் படைத்துள்ளது. இதனால் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தர்பார்படத்தில் இடம்பெற்றுள்ள மற்ற பாடல்களை வரும் 7ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

https://www.A1TamilNews.com

From around the web