தர்பாரில் ரஜினிக்கு வில்லன் யார்?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் மோஷன் வீடியோவுடன் தீம் மியூசிக்கும் நவம்பர் 7ம் தேதி வெளியாக உள்ளது. ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவும் காமெடியனாக யோகி பாபுவும் நடித்துள்ளது தெரியும். இவர்கள் இருக்கும் ஸ்டில்களும் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. ஆனால் வேறு முக்கிய நடிகர்கள் பற்றிய தகவல்கள் வெளிவராமலேயே உள்ளது. ரஜினி படங்களில் வில்லனாக நடிப்பவர்களுக்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்கும். வில்லனாக நடிப்பவர்கள் நன்றாக இருந்தால் தான் ஹீரோவின் வேடத்திற்கு கூடுதல் சிறப்பு
 

தர்பாரில் ரஜினிக்கு வில்லன் யார்?.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் மோஷன் வீடியோவுடன் தீம் மியூசிக்கும் நவம்பர் 7ம் தேதி வெளியாக உள்ளது.

ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவும் காமெடியனாக யோகி பாபுவும் நடித்துள்ளது தெரியும். இவர்கள் இருக்கும் ஸ்டில்களும் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. ஆனால் வேறு முக்கிய நடிகர்கள் பற்றிய தகவல்கள் வெளிவராமலேயே உள்ளது.

ரஜினி படங்களில் வில்லனாக நடிப்பவர்களுக்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்கும். வில்லனாக நடிப்பவர்கள் நன்றாக இருந்தால் தான் ஹீரோவின் வேடத்திற்கு கூடுதல் சிறப்பு கிடைக்கும் என்பது ரஜினி ஃபார்முலா. முரட்டுக்காளையில் ஜெய்சங்கர் தொடங்கி பேட்ட படத்தில் விஜய் சேதுபதி, நவாஸுதின் சித்திக் வரையிலும் ரஜினி படத்தின் வில்லன்கள் பெருமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

தனக்குப் பிடித்த வில்லன் பாட்ஷாவில் அண்டனியாக நடித்த ரகுவரன் தான் என்று ரஜினி சொல்லியிருக்கிறார். ரஜினி நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வில்லன் யார் என்று தான் முதலில் முடிவு செய்வது வழக்கமாகி விட்டது.

இந்நிலையில் தர்பார் படத்தில் வில்லனாக நடிப்பது பாலிவுட் படங்களின் ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்த சுனில் ஷெட்டி என்று தெரிய வந்துள்ளது. தமிழில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் என்பது போல் இந்தியில் ஆக்‌ஷன் ஹீரோ என்றால் சுனில் ஷெட்டி என்று அறியப்பட்டவர். 

மங்களூர் அருகே சிறிய ஊரில் பிறந்தவர், மும்பையில் செட்டில் ஆகியுள்ளார்.  மறைந்த நடிகை திவ்யபாரதியுடன் பல்வான் என்ற படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக அறிமுகமானார். அரங்கேற்ற வேளை படத்தின் இந்திப் பதிப்பில் ரேவதி வேடம் ஆணாக மாற்றப்பட்டது. அதில் அக்‌ஷய்குமார் சுனில் ஷெட்டி இரண்டு கதாயநாயகர்களாக நடித்தனர். இருவரும் நல்ல நண்பர்களும் ஆவார்கள்.

அக்‌ஷய்குமாருடன் தட்கன் படத்தில் நெகட்டிவ் வேடத்தில் நடித்தவர், ஷாருக்கானின் மே ஹுன் நா படத்தின் மூலம் வில்லனாகவும் நடிக்கத் தொடங்கினார். பாடி பில்டரான சுனில் ஷெட்டி அது தொடர்பான தொலைகாட்சி தொடர்களையும் தொகுத்து வழங்கியுள்ளார். இப்போது ரஜினியுடன் தர்பார் படத்தில் வில்லனாக மோதுகிறார். மும்பை பின்னணியில் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகுவதால் சுனில் ஷெட்டி கூடுதல் பலம் சேர்ப்பார் என்று கூறப்படுகிறது.

கபாலியில் சீன நடிகர், காலாவில் நானா படேகர், 2.0 வில் அக்‌ஷய்குமார், பேட்ட யில் நவாஸுதின் சித்திக், தர்பாரில் சுனில் ஷெட்டி என்று வேற்று மொழி நடிகர்களே ரஜினிக்கு வில்லனாக தொடர்ந்து நடித்து வருகிறார்கள். தலைவர்168 படத்தில் வில்லன் யார் என்ற எதிர்ப்பார்ப்பும் எழுந்துள்ளது.

– வணக்கம் இந்தியா

From around the web