அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தி இந்தியாவில் புற்றுநோய்க்கு சிகிச்சை தரும் ‘கருணா’!

டல்லாஸ்: அமெரிக்காவில் இயங்கி வரும் High Octavez என்ற இசைக்குழு, எட்டு ஆண்டுகளாக இசை நிகழ்ச்சி மூலம் நிதி திரட்டி இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவி செய்து வருகிறார்கள். High Octavez – Karuna – Compassion for Humanity என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பலனடைந்து வருகிறார்கள்.நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுடைய குடும்ப சூழல் உள்பட அனைத்து விவரங்களையும் முழுமையாக தெரிந்து கொண்டு, தேவைக்கேற்ப நிதியுதவி
 

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தி இந்தியாவில் புற்றுநோய்க்கு சிகிச்சை தரும் ‘கருணா’!

டல்லாஸ்: அமெரிக்காவில் இயங்கி வரும் High Octavez என்ற இசைக்குழு, எட்டு ஆண்டுகளாக இசை நிகழ்ச்சி மூலம் நிதி திரட்டி இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவி செய்து வருகிறார்கள்.

High Octavez – Karuna – Compassion for Humanity என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள், மாணவர்கள்
உள்ளிட்ட பலரும் பலனடைந்து வருகிறார்கள்.நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுடைய குடும்ப சூழல் உள்பட அனைத்து விவரங்களையும் முழுமையாக தெரிந்து கொண்டு, தேவைக்கேற்ப நிதியுதவி செய்யப்படுகிறது.

2010ம் ஆண்டு டல்லாஸில் நண்பர்களால் தொடங்கப்பட்ட இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் இதுவரையிலும் 90 குடும்பங்கள் உதவி பெற்றுள்ளார்கள். ஒரு வேளை சிகிச்சை முடிவடைவதற்கு முன்னதாகவே நோயாளி மரணமடைந்து விட்டால், அவருக்காகத் திரட்டப்பட்ட தொகை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவரது குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய உதவியாக இருக்கும் என்ற நோக்கத்தில் இம்முறை பின்பற்றப்படுகிறது.

கருணா அமைப்பின் சிறந்த நோக்கங்களும்,செயல்பாடுகளும் தனித்துவம் மிகுந்தவையாக உள்ளது. எந்த ஒருவருக்காக நிதி திரட்டப்படுகிறதோ, அவரிடம் மட்டுமே அந்தத் தொகை அளிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தப்படுத்திக் கொள்கின்றனர்.

சிகிச்சை முடிந்த பின்னும், நோயாளியிடம் தொடர்ந்து அவரது உடல்நிலை பற்றி அறிந்து கொள்கிறார்கள். சிகிச்சை முடிந்து நலமுடன் திரும்பியவர்கள் கருணா அமைப்பின் குடும்ப உறுப்பினராகி விடுகிறார்கள்

பொழுதுபோக்கிற்காகவும், இசை மீது கொண்ட அளவில்லாத ஆர்வத்தாலும் இசைக்குழுவை நடத்தி வந்த நண்பர்கள், புற்றுநோயால் அமெரிக்காவில் இருந்து படிப்பை விட்டு இந்தியா சென்ற மாணவனுக்காக, முதன் முதலாக 2011ஆம் ஆண்டு நிதி திரட்டுவதற்கான இசை நிகழ்ச்சியை நடத்ததினார்கள்.

அதைத் தொடர்ந்து ‘கருணா’ என்ற பெயரில் தன்னார்வ அமைப்பாகப் பதிவு செய்து Nonprofit, 501 அனுமதி பெற்றனர். அமெரிக்காவிலிருந்து நிதிதிரட்டி இந்தியாவில் இயங்கி வரும் Regional Cancer Center (RCC) அமைப்பு மூலம் புற்று நோய் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு உதவி வருகிறார்கள்.

ஆண்டு தோறும் நடைபெறும் இசை நிகழ்ச்சி தவிர வேறு சில நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. கருணா உறுப்பினர்கள் இணைந்து நடத்தும் பாயசத் திருவிழா, வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளுடன் நடத்தப்படும் தீபாவளித்திருவிழா மூலமாகவும் நிதி திரட்டப்படுகிறது.

இந்தியாவில் இருப்பவர்களுக்கு மட்டுமில்லாமல், அமெரிக்காவில் வறுமையில் வாழ்பவர்களுக்கு உதவும் வகையிலும் சில திட்டங்களைச் செயல்படுத்துகிறார்கள். வீடுகள் இல்லாது விடுதியில் வாழும் மக்களுக்கு குழந்தைகளால் தயாரிக்கப்பட்ட உணவுகள் (Sandwich Packets) மாதம் ஒருமுறை வழங்கப்படுகிறது.

குழந்தைகள் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு, குழந்தைகளே உருவாக்கிய வண்ணங்கள் நிறைந்த போர்வைகள் கிறிஸ்துமஸ் பரிசாக அளிக்கப்படுகிறது. டல்லாஸ் மாநகரப்பகுதியில் உள்ள இர்விங் பள்ளிக்குழந்தைகளுக்கு, பள்ளிக்குத் தேவையான பொருள்கள் அடங்கிய 100 தோள் பைகள் (backpacks) ஆண்டுதோறும் அளிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு இசை நிகழ்ச்சி மார்ச் 31ம் தேதி சனிக்கிழமை ஃப்ரிஸ்கோ லிபர்டி உயர்நிலைப் பள்ளி வளாக அரங்கத்தில், பிற்பகல் 2 மணி மற்றும் மாலை 6 மணி என இரண்டு காட்சிகளாக நடைபெறுகிறது. நிகழ்ச்சி முழுவதும் தமிழ் திரையிசைப் பாடல்கள் இடம் பெறுகிறது.

இசையால் பார்வையாளர்களை மகிழ்விக்கும் ‘கருணா’ குழுவினர், அதன் மூலம் திரட்டப்படும் நிதியால் புற்றுநோய்க்கு மருத்துவம் செய்ய உதவி வருவது பிரம்மிப்பூட்டுகிறது.

-வணக்கம் இந்தியா

From around the web