மகிழ்ச்சி! இனி சிலிண்டர்களை வாட்ஸ்-ஆப் மூலமே முன்பதிவு செய்யலாம்!

சிலிண்டர்களை முன்பதிவு செய்ய இதுவரை வாடிக்கையாளர்கள் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண் மூலமே புக்கிங் செய்ய முடியும். அல்லது வாடிக்கையாளர் சேவை மைய எண்ணில் அழைக்க வேண்டும். பல நேரங்களில் லைன் கிடைக்காது. அல்லது எப்போதும் பிஸியாகவே இருக்கும். சில சமயம் புக் செய்ய கால தாமதம் ஆகலாம். இணைப்பில் வரவே காத்திருக்க வேண்டியிருக்கும். வாடிக்கையாளர்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டும், அனைவருக்கும் ஒரே மாதிரி விரைவான சேவையை அளிக்கவும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் வாட்ஸ் அப்
 

மகிழ்ச்சி! இனி சிலிண்டர்களை வாட்ஸ்-ஆப் மூலமே முன்பதிவு செய்யலாம்!சிலிண்டர்களை முன்பதிவு செய்ய இதுவரை வாடிக்கையாளர்கள் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண் மூலமே புக்கிங் செய்ய முடியும்.

அல்லது வாடிக்கையாளர் சேவை மைய எண்ணில் அழைக்க வேண்டும். பல நேரங்களில் லைன் கிடைக்காது. அல்லது எப்போதும் பிஸியாகவே இருக்கும். சில சமயம் புக் செய்ய கால தாமதம் ஆகலாம். இணைப்பில் வரவே காத்திருக்க வேண்டியிருக்கும்.

வாடிக்கையாளர்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டும், அனைவருக்கும் ஒரே மாதிரி விரைவான சேவையை அளிக்கவும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் வாட்ஸ் அப் மூலமாக புக்கிங் செய்யும் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி 1800224344 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலம் சிலிண்டர்களை முன்பதிவு செய்ய முடியும்.

புக்கிங் உறுதிசெய்யப்பட்டவுடன் வாடிக்கையாளருக்கு வாட்ஸ் அப் மூலமே குறுந்தகவல் அனுப்பப்படும். சிலிண்டருக்கான கட்டணத் தொகையை டெபிட் , கிரெடிட் கார்டுகள், யூபிஐ என ஆன்லைன் மூலமாகவே செலுத்தலாம் எனவும் , மேலும் சிலிண்டர் வந்து சேரும் தேதியை ட்ரேஸ் செய்யும் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

A1TamilNews.com

From around the web