சோம்பலை விரட்டியடிக்கும் கறிவேப்பிலை குழம்பு!

தேவையான பொருட்கள் கறிவேப்பிலை – 2 கொத்து மிளகு – 10 காய்ந்த மிளகாய் – 2 உளுத்தம்பருப்பு -1/2 டீஸ்பூன் துவரம்பருப்பு -1 டீஸ்பூன் கடுகு – 1டீஸ்பூன் புளி – சிறிதளவும் நல்லெண்ணெய் – 50 மிலி உப்பு – தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு முதலில் கறிவேப்பிலையை வதக்கிக் கொள்ளவும். அதே வாணலியில் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும். இதனுடன் புளியை சேர்த்து மிக்ஸியில்
 

சோம்பலை விரட்டியடிக்கும் கறிவேப்பிலை குழம்பு!தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை – 2 கொத்து
மிளகு – 10
காய்ந்த மிளகாய் – 2
உளுத்தம்பருப்பு -1/2 டீஸ்பூன்
துவரம்பருப்பு -1 டீஸ்பூன்
கடுகு – 1டீஸ்பூன்
புளி – சிறிதளவும்
நல்லெண்ணெய் – 50 மிலி
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு முதலில் கறிவேப்பிலையை வதக்கிக் கொள்ளவும். அதே வாணலியில் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும்.

இதனுடன் புளியை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கரைத்து வைத்ததை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

கறிவேப்பிலைக் குழம்பை சுட்ட அப்பளத்துடன் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவை அபாரமாக இருக்கும் .

A1TamilNews.com

From around the web