மதுரையில் ஊரடங்கு நீட்டிப்பு! முதலமைச்சர் உத்தரவு!!

மதுரையில் முழு ஊரடங்கு மேலும் 7 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 280 பேருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனோ பாதித்தோர் எண்ணிக்கை 3,703 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையிலும் 51 பேர் உயிரிழந்துள்ளனர், 967 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் முழு ஊரடங்கு வரும் ஜூலை 6ஆம் தேதி முதல் ஜூலை 12ஆம்
 
மதுரையில் ஊரடங்கு நீட்டிப்பு! முதலமைச்சர் உத்தரவு!!மதுரையில் முழு ஊரடங்கு மேலும் 7 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 280 பேருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனோ பாதித்தோர் எண்ணிக்கை 3,703 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையிலும் 51 பேர் உயிரிழந்துள்ளனர், 967 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  2,405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 
இந்நிலையில் மதுரையில் முழு ஊரடங்கு வரும் ஜூலை 6ஆம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 
 
மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். 
 
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் முழு ஊரடங்கு காலத்தில் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும், நாளொன்றுக்கு இரு முறை கிருமி நாசினி தெளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

From around the web