மதுரை முழு ஊரடங்கு! இன்னும் எத்தனை நாட்களுக்கு?

மதுரை மாவட்டத்தில் ஜூன் 24ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும், ஜூன் 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர், இது ஜூலை 5-ந்தேதி வரையும், அடுத்து ஜூலை 12-ந்தேதி நேற்று நள்ளிரவு வரையும்
 

மதுரை முழு ஊரடங்கு! இன்னும் எத்தனை நாட்களுக்கு?மதுரை மாவட்டத்தில் ஜூன் 24ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது

மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும், ஜூன் 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

பின்னர், இது ஜூலை 5-ந்தேதி வரையும், அடுத்து ஜூலை 12-ந்தேதி நேற்று நள்ளிரவு வரையும் நீட்டிக்கப்பட்டது.  இந்நிலையில் மேலும் 2 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் படி மதுரை மாவட்ட முழு ஊரடங்கு ஜூலை 14ம் தேதி, செவ்வாய்கிழமை இரவு 12 வரையிலும் நீட்டிப்பு செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இந்த முழு ஊரடங்கு காலக்கட்டத்தில் காய்ச்சல் முகாம்கள் மற்றும் வீடுதோறும் நேரடி ஆய்வு  தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் 2 நாட்களுக்கு இந்தப் பணி நடைபெறும்.
 
ஏற்கனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், அரசின் முயற்சிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 

From around the web