மறுபடியும் 10 நாட்களுக்கு ஊரடங்கு !அதிர்ச்சியில் பொதுமக்கள்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படுவதால் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கடைகள் திறக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் நத்தம் வட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதன்படி கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சிக்கு ஆதரவு அளிக்கவும், 10 நாட்களுக்கு அனைத்து
 

மறுபடியும்  10 நாட்களுக்கு ஊரடங்கு !அதிர்ச்சியில் பொதுமக்கள்!மிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படுவதால் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கடைகள் திறக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் நத்தம் வட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதன்படி கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சிக்கு ஆதரவு அளிக்கவும், 10 நாட்களுக்கு அனைத்து கடைகளை மூடவும் வேண்டும் எனவும் கடை உரிமையாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் படி ஜூலை 11ம் தேதி முதல் 20 ம் தேதி வரை நத்தம் வட்டாரத்திலுள்ள 23 ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்படும் என வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த ஊரடங்கு நாட்களில் அத்தியாவசியப் பொருட்களான மருந்து, காய்கறி, பால் பொருட்கள் ஆகியவை தடையின்றி கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியில் வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக விலகலைக் கடைப்பிடித்து அரசின் வழிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்கவும் நத்தம் வட்டாட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

A1TamilNews.com

From around the web