கோப்பை யாருக்கு…. இன்று ஐபிஎல் கிளைமாக்ஸ்!

மும்பை: இரண்டு மாதங்களாக நடந்து வந்த ஐபி்எல் கிரிக்கெட் திருவிழா இன்று முடிவுக்கு வருகிறது. இந்தத் தொடரின் 60வது போட்டி, அதாவது நிறைவுப் போட்டி இன்று மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியில் இருமுறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இரண்டு ஆண்டுகால தடைக்குப் பிறகு இந்த ஆண்டு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அனைத்து விதத்தில் தன்னை ஒரு கிங்காக நிரூபித்து அசத்தலாக இறுதிச்
 

கோப்பை யாருக்கு…. இன்று ஐபிஎல் கிளைமாக்ஸ்!

மும்பை: இரண்டு மாதங்களாக நடந்து வந்த ஐபி்எல் கிரிக்கெட் திருவிழா இன்று முடிவுக்கு வருகிறது.

இந்தத் தொடரின் 60வது போட்டி, அதாவது நிறைவுப் போட்டி இன்று மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இந்தப் போட்டியில் இருமுறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

இரண்டு ஆண்டுகால தடைக்குப் பிறகு இந்த ஆண்டு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அனைத்து விதத்தில் தன்னை ஒரு கிங்காக நிரூபித்து அசத்தலாக இறுதிச் சுற்றுக்குச் சென்றுள்ளது. இந்த அணியின் பலம் பேட்டிங். பந்து வீச்சு சுமார்தான்.

ஏற்கனவே ஹைதராபாத் அணியை லீக் சுற்றில் இரண்டு முறையும், இறுதிப்போட்டிக்கான தகுதிச் சுற்றிலும் புரட்டியெடுத்துள்ளது சென்னை அணி.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பலம் பந்துவீச்சு. பேட்டிங்கிலும் அவ்வளவு சொதப்பல் இல்லை. ஆனாலும் சென்னையை வெல்லுமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. இந்த சீசனில் ஹைதராபாத்தால் வெல்ல முடியாத ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ்தான். எனவே இறுதிப் போட்டியில் பழிதீர்க்க முடிந்த வரை முயற்சிப்பார்கள் ஹைதராபாத் அணியினர்.

இன்று மாலை 7 மணிக்கு போட்டி நடக்கிறது.

-வணக்கம் இந்தியா

From around the web