ஆகஸ்ட் 15 ல் கொரோனா தடுப்பூசி சோதனை முடிவுகள்!

ஜதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ள கொரோனாவுக்கான தடுப்பூசியை விலங்குகளுக்கு சோதனை செய்து வெற்றி பெற்று அடுத்தகட்டமாக மனிதர்கள் மீதான சோதனைக்கான நடவடிக்க்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மிகவும் முக்கியமான கொரோனா தடுப்பூசியை மருத்துவரீதியிலான சோதனைக்கு ஒப்புதல் அளித்துள்ளோம். ஜூலை 7ம் தேதிக்குள் சோதனைக்கான அனைத்து நடைமுறைகளையும் முடித்து விட்டு சோதனையை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று பாரத் பயோடெக் நிறுவனத்தை மத்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் பொது இயக்குனர் பல்ராம் பார்கவா கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
 

ஆகஸ்ட் 15 ல் கொரோனா தடுப்பூசி சோதனை முடிவுகள்!ஜதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ள கொரோனாவுக்கான தடுப்பூசியை விலங்குகளுக்கு சோதனை செய்து வெற்றி பெற்று அடுத்தகட்டமாக மனிதர்கள் மீதான சோதனைக்கான நடவடிக்க்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

மிகவும் முக்கியமான கொரோனா தடுப்பூசியை மருத்துவரீதியிலான சோதனைக்கு ஒப்புதல் அளித்துள்ளோம். ஜூலை 7ம் தேதிக்குள் சோதனைக்கான அனைத்து நடைமுறைகளையும் முடித்து விட்டு சோதனையை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று பாரத் பயோடெக் நிறுவனத்தை மத்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் பொது இயக்குனர் பல்ராம் பார்கவா கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். 

விரைவில் சோதனைகள் நடத்தப்பட்டு, இந்த சோதனையின் முடிவுகள் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதிக்குள் வெளியாக வேண்டும் என்றும் மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் சார்பில் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் பல்ராம் பார்கவா கூறியுள்ளார். சோதனை முடிவுகள் வெளியாகி மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்திய நிறுவனத்தின் தன்னிச்சையான கொரோனா தடுப்பூசி முயற்சி அடுத்த கட்டத்தை நோக்கி விரைவாக நகர்ந்துள்ளது மகிழ்ச்சிக்குரியதாகும். இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வந்து விட்டால் 2021ம் ஆண்டு நம்பிக்கை தரும் ஆண்டாக மலரும்.

A1TamilNews.com

From around the web