குற்றால அருவிகளில் கொட்டும் தண்ணீர்! கூட்டமில்லாத அருவிக் கரைகள்!

தென் மாவட்டங்களுக்கு ஊட்டி, கொடைக்கானல் போல் சுற்றுலாத்தளமாக விளங்குவது குற்றாலம். தமிழகம் முழுவதிலிருந்தும், கேரளாவிலிருந்தும் குற்றாலத்திற்கு பயணிகள் வருவது உண்டு. ஊட்டி, கொடைக்கானலுக்கு இல்லாத சிறப்பு இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலி அருவிகள் மற்றும் சாரல் மழை ஆகும். ஆண்டு தோறும் சாரல் மழையுடன், ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் இந்த அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும் காலக்கட்டம் குற்றால சீசன் என சிறப்புடன் அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு சீசன் வழக்கம் போல் ஜூன்
 

குற்றால அருவிகளில் கொட்டும் தண்ணீர்! கூட்டமில்லாத அருவிக் கரைகள்!தென் மாவட்டங்களுக்கு ஊட்டி, கொடைக்கானல் போல் சுற்றுலாத்தளமாக விளங்குவது குற்றாலம். தமிழகம் முழுவதிலிருந்தும், கேரளாவிலிருந்தும் குற்றாலத்திற்கு பயணிகள் வருவது உண்டு.

ஊட்டி, கொடைக்கானலுக்கு இல்லாத சிறப்பு இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலி அருவிகள் மற்றும் சாரல் மழை ஆகும். 

ஆண்டு தோறும் சாரல் மழையுடன், ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் இந்த அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும் காலக்கட்டம் குற்றால சீசன் என சிறப்புடன் அழைக்கப்படுகிறது.

இந்த ஆண்டு சீசன் வழக்கம் போல் ஜூன் மாதம் தொடங்கியது. அருவிகளில் தண்ணீர் தொடர்ந்து விழுந்து வருகிறது. கடந்த சில நாட்களாக குற்றாலத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிக்குள் தொடர்ந்து சாரல் மழை பெய்வதால் அருவிகளில் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.

ஊரடங்கினால் சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அருவிக் கரைகள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் சீசன் காலத்தில் நடைபெறும் வியாபாரமும் முழுவதுமாக தடைபட்டுள்ளது. 

A1TamilNews.com

From around the web