குடித்துவிட்டு வண்டி ஓட்டினால் ஜெயிலா? – நீதிமன்றம் அதிரடி

மது போதையில் வாகனம் ஓட்டுவோரைக் கைது செய்ய வேண்டும் என்ற அதிரடி உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. சாலை விபத்து ஒன்றில் காயமடைந்த மணிகண்டன் என்பவர், தனக்கு வழங்கப்பட்ட 4 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையை அதிகரித்துத் தரக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, காப்பீட்டு நிறுவனம் சார்பில் தாக்கல் செய்த மனுவில், மனுதாரர் மணிகண்டன் , மதுபோதையில் வாகனம் ஓட்டிச் சென்றதாகவும், அவர் தற்போது எந்த ஊனமும் இல்லாமல் நல்ல முறையில் இருப்பதாகவும்
 

குடித்துவிட்டு வண்டி ஓட்டினால் ஜெயிலா? – நீதிமன்றம் அதிரடி

து போதையில் வாகனம் ஓட்டுவோரைக் கைது செய்ய வேண்டும் என்ற அதிரடி உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. சாலை விபத்து ஒன்றில் காயமடைந்த மணிகண்டன் என்பவர், தனக்கு வழங்கப்பட்ட 4 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையை அதிகரித்துத் தரக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, காப்பீட்டு நிறுவனம் சார்பில் தாக்கல் செய்த மனுவில், மனுதாரர் மணிகண்டன் , மதுபோதையில் வாகனம் ஓட்டிச் சென்றதாகவும், அவர் தற்போது எந்த ஊனமும் இல்லாமல் நல்ல முறையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் பாதிக்கப்பட்ட மணிகண்டன் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மணிகண்டன் 100 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக சான்று அளித்தனர். அதன் அடிப்படையில் மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், மது போதையில் வாகனம் ஓட்டிச் செல்பவர்களைக் கைது செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் வலியுறுத்தினர்.

http://www.A1TamilNews.com

From around the web