தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை!தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அரசு மருத்துவமனைகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் நிலையில் தனியார் மருத்துவமனைகள் மூலம் சிகிச்சை பெற சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்குக் கட்டண விவரங்களையும் அரசு அறிவித்துள்ளது. கொரோனா ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.5,000 கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். தீவிர சிகிச்சை
 

தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை!தமிழக அரசு அறிவிப்பு!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அரசு மருத்துவமனைகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் நிலையில் தனியார் மருத்துவமனைகள் மூலம் சிகிச்சை பெற சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்குக் கட்டண விவரங்களையும் அரசு அறிவித்துள்ளது. கொரோனா ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.5,000 கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.

தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.9,000 முதல் ரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் இணைந்திருப்பவர்கள் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்த தேவையில்லை.

அரசு அறிவித்துள்ள தொகைக்கு அதிகமாக மருத்துவக் கட்டணம் வசூலிக்கப்பட்டால் மருத்துவமனைகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 1800 425 3993 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web