தமிழகத்தில் 4 லட்சம் பேருக்கு கொரோனா ஆய்வு!தனிமைப்படுத்தும் பணி தீவிரம்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் பல்வேறு தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பல்வேறு இடங்களில் தீயணைப்பு வீரர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர, வீடு, வீடாகச் சென்று கொரானோ பாதிப்பு அறிகுறி குறித்து தமிழக சுகாதாரத் துறை ஆய்வு செய்து வருகிறது. இதுவரை சுமார் 1,08,677 வீடுகளில் 3,96,147 நபர்களிடம் ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டவர்கள் அதிகம் வசிக்கும் சென்னை,
 

தமிழகத்தில் 4 லட்சம் பேருக்கு கொரோனா ஆய்வு!தனிமைப்படுத்தும் பணி தீவிரம்!கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் பல்வேறு தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பல்வேறு இடங்களில் தீயணைப்பு வீரர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தவிர, வீடு, வீடாகச் சென்று கொரானோ பாதிப்பு அறிகுறி குறித்து தமிழக சுகாதாரத் துறை ஆய்வு செய்து வருகிறது. இதுவரை சுமார் 1,08,677 வீடுகளில் 3,96,147 நபர்களிடம் ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டவர்கள் அதிகம் வசிக்கும் சென்னை, மதுரை, ஈரோடு, நெல்லை, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நோய்த் தொற்று கண்டறியப்பட்ட நபர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தும் பணிகளும் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 74 கொரோனா பாதிப்பு நோயாளிகள் இருப்பதாகவும் சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.

A1TamilNews.com

 

From around the web