கொரோனா தடுப்பு நடவடிக்கை! அரசு அதிகாரிகளின் சம்பளத்தில் பிடித்தம்!!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேரக் கட்டுப்பாட்டின் அடிப்படையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கொரோனா தடுப்பிற்காக நிதி வழங்க மாநில அரசுகள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளன. இந்நிலையில், அரசாங்கமே முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று தெலங்கானா மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இதையடுத்து முதலமைச்சர், மாநில அமைச்சரவை, எம்எல்சிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளின் சம்பளத்தில் 75 சதவீதம் மார்ச் மாத ஊதியத்தில் கொரோனா தடுப்பு நிதிக்காக
 

கொரோனா தடுப்பு நடவடிக்கை! அரசு அதிகாரிகளின் சம்பளத்தில் பிடித்தம்!!கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேரக் கட்டுப்பாட்டின் அடிப்படையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கொரோனா தடுப்பிற்காக நிதி வழங்க மாநில அரசுகள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளன.

இந்நிலையில், அரசாங்கமே முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று தெலங்கானா மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இதையடுத்து முதலமைச்சர், மாநில அமைச்சரவை, எம்எல்சிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளின் சம்பளத்தில் 75 சதவீதம் மார்ச் மாத ஊதியத்தில் கொரோனா தடுப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்பட்ட வேண்டும் என்று அதிரடி அறிவிப்பை முதல்வர் சந்திரசேகரராவ் வெளியிட்டுள்ளார்.

இது தவிர ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் 60 சதவீதம்,மற்ற அனைத்து வகை அரசு ஊழியர்கள் 50 சதவீதம், நான்காம் வகுப்பு, அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் 10 சதவீதம், ஓய்வூதியதாரர்கள் 10 சதவீதம் என சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் முதல்வர் அறிவித்துள்ளார்.

தேவையற்ற வேலையை தெலங்கானா அரசு செய்திருக்கிறது என முதல்வரை, பாஜக விமர்சித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

A1TamilNews.com

From around the web