உலகம் முழுவதும் பரவும் கொரோனா வைரஸ்… அமெரிக்காவில் 35 பேருக்கு பாதிப்பு!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல், தற்போது உலக நாடுகளுக்கு பெரும்அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அமெரிக்கா, கனடா, தைவான், தென் கொரியா, ஈரான், இந்தியா, இஸ்ரேல் என 32 நாடுகளை தாக்கியுள்ளது. இது வரையிலும் 78 ஆயிரத்து 811 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. உயிர்ப்பலி 2 ஆயிரத்து 462 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் 76 ஆயிரத்து 936, தென் கொரியா 602, ஜப்பான் 132, ஹாங்காங் 70, இத்தாலி 76, அமெரிக்கா 35, ஈரான்
 
உலகம் முழுவதும் பரவும் கொரோனா வைரஸ்… அமெரிக்காவில் 35 பேருக்கு பாதிப்பு!
கொரோனா வைரஸ் தாக்கியுள்ள நாடுகள் – உலக சுகாதார அமைப்பின் பிப்ரவரி 23ம் தேதி நிலவரத் தகவல். நன்றி : சி.என்.என்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல்,  தற்போது உலக நாடுகளுக்கு பெரும்அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அமெரிக்கா, கனடா, தைவான், தென் கொரியா, ஈரான், இந்தியா, இஸ்ரேல் என 32 நாடுகளை தாக்கியுள்ளது.

இது வரையிலும் 78 ஆயிரத்து 811 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. உயிர்ப்பலி 2 ஆயிரத்து 462 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் 76 ஆயிரத்து 936, தென் கொரியா 602, ஜப்பான் 132, ஹாங்காங் 70, இத்தாலி 76,  அமெரிக்கா 35, ஈரான் 28, தைவான் 26, ஆஸ்திரேலியா 22, மலேசியா 22, ஜெர்மனி 16, வியட்நாம் 16, ஐக்கிய அரபு நாடுகள் 13, , ஃப்ரான்ஸ் 12, மக்காவு 10, கனடா 9 , இங்கிலாந்து 9, இந்தியா 3, பிலிப்பைன்ஸ் 3, ரஷ்யா 2, ஸ்பெயின் 2 மற்றும் கம்போடியா, எகிப்து, ஃபின்லாந்து, இஸ்ரேல், லெபனான், நேபாளம், இலங்கை, ஸ்வீடன் நாடுகளில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளில் 634 பேருக்கும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.

கொரோனா வைராஸால் அதிகபட்சமாக சீனாவில் 2 ஆயிரத்து 442, தென் கொரியா 5, ஈரான் 5, இத்தாலி 2, ஹாங்காங் 2, ஜப்பான் 1, தைவான் 1, ஃப்ரானஸ் 1 மற்றும் பிற நாடுகளில் 2 பேர் பலியாகியுள்ளனர். சுற்றுலாக் கப்பலில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு அந்தக் கப்பலில் உள்ளவர்கள் ஜப்பான் கடற்கரையில் தனிமைப் படுத்துள்ளனர்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அமெரிக்க காங்கிரஸ் அவையிடம் சிறப்பு நிதி கேட்டு வெள்ளை மாளிகை தரப்பிலிருந்து திங்கட்கிழமை கோரிக்கை வைக்கப்பட உள்ளது. சுகாதாரச் சேவைப் பிரிவு செயலாளர் அலெக்ஸ் அசர் இதற்கான முன் தயாரிப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.

இது வரையிலும் தென் அமெரிக்க நாடுகளில் மட்டுமே கொரோனா வைரஸ் தாக்குதல்கள் பற்றி எந்த தகவல்களும் இல்லை, ஆப்பிரக்கா கண்டத்தில் எகிப்து நாட்டில் மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா உட்பட உலகின் அனைத்து நாடுகளையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.

http://www.A1TamilNews.com

From around the web