நாளை முதல் பெட்ரோல், டீசலுக்கு கொரோனா வரி! மாநில அரசு அதிரடி அறிவிப்பு!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் நான்காவது கட்ட ஊரடங்கு மே31ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் ஊரடங்கால் மாநில அரசுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை ஈடுகட்டவும், வரி வருவாயை மேலும் அதிகப்படுத்தவும் நாட்டின் பல மாநிலங்கள் மதுக்கடைகளை திறந்தன. தமிழகம் மட்டுமல்ல, புதுச்சேரியிலும் நான்காவது கட்ட ஊரடங்கில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. வரி வருவாயைப் பெருக்க புதுச்சேரி அரசு மதுபானங்கள் விலையை இருமடங்காக உயர்த்தியது. இதே போல் பெட்ரோல் மற்றும் டீசலுக்கும் மே 29
 

நாளை முதல் பெட்ரோல், டீசலுக்கு கொரோனா வரி! மாநில அரசு அதிரடி அறிவிப்பு!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் நான்காவது கட்ட ஊரடங்கு மே31ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் ஊரடங்கால் மாநில அரசுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை ஈடுகட்டவும், வரி வருவாயை மேலும் அதிகப்படுத்தவும் நாட்டின் பல மாநிலங்கள் மதுக்கடைகளை திறந்தன. தமிழகம் மட்டுமல்ல, புதுச்சேரியிலும் நான்காவது கட்ட ஊரடங்கில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

வரி வருவாயைப் பெருக்க புதுச்சேரி அரசு மதுபானங்கள் விலையை இருமடங்காக உயர்த்தியது. இதே போல் பெட்ரோல் மற்றும் டீசலுக்கும் மே 29 நாளை முதல் கொரோனா வரி விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலுக்கு 5.75%, , டீசலுக்கு 3.65% வரி செலுத்த வேண்டும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. மேலும் வர இருக்கும் 3 மாதங்கள் இதே நடைமுறை பின்பற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசலுக்கு கொரோனா வரி விதித்தது பொது மக்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

A1TamilNews.com

From around the web