அமெரிக்க ராணுவ வீரருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்!

அமெரிக்க ராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் இது வரையிலும் 60 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. தென் கொரியாவில் பணியில் இருக்கும் அமெரிக்க வீரருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. தென் கொரியாவில் கொரோனா வைரஸ் குறித்து அதிகபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவில் இது வரையிலும் 1595 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 12 பேர் உயிரிழந்துள்ளனர். யு.எஸ் – கொரியா ராணுவப் பயிற்சி தற்காலிகமாக
 

அமெரிக்க ராணுவ வீரருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்!மெரிக்க ராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் இது வரையிலும் 60 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.

தென் கொரியாவில் பணியில் இருக்கும் அமெரிக்க வீரருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. தென் கொரியாவில் கொரோனா வைரஸ் குறித்து அதிகபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவில் இது வரையிலும் 1595 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

யு.எஸ் – கொரியா ராணுவப் பயிற்சி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரியாவுக்கு செல்லும் அமெரிக்கர்கள், பரிசீலனை செய்யுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது வரையிலும் சீனாவில் 2 ஆயிரத்து 744, தென் கொரியா 13 , இத்தாலி 12,  ஈரான் 19 பேர் கொரோனா வைராஸால் உயிரிழந்துள்ளனர். 

உலக அளவில் 2 ஆயிரத்து 800 பேர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர்.  சீனாவில் 78 ஆயிரத்து 497, தென் கொரியா 1595 , ஆஸ்திரேலியா 22, இத்தாலி 400, ஈரான் 139, அமெரிக்கா 60, பிரேசில் ஒருவர், என உலகின் அனைத்து கண்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவி விட்டது. 

அமெரிக்காவில் கலிஃபோர்னியா 8 பேர், இலனாய் 2 பேர், மசசூசட்ஸ், வாஷிங்டன், அரிசோனா, விஸ்கான்ஸின் மாநிலங்களில் தலா ஒருவர் என 14 பேருக்கு சீனா பயணம் அல்லது நோய் தாக்கியவர்களின் அருகாமை போன்ற காரணங்களால் பரவியுள்ளது. டயமண்ட் பிரின்சஸ் சுற்றுலாக் கப்பலிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களில் 42 பேருக்கு கொரோனா வைரஸ் உள்ளது. 

16 பேர் கலிஃபோர்னியா ட்ராவிஸ் ஏர்பேஸ் பகுதியிலும், 4 பேர் வாஷிங்டன் ஸ்போக்கன் நகரத்திலும், 8 பேர் டெக்சாஸ் லேக்லண்ட் ஏர்பேஸ் பகுதியிலும், 13 பேர் யுனிவர்சிட்டி ஆஃப் நெப்ராஸ்கா மருத்துவ வளாகத்திலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள்.

கொரோனா வைரஸ்ஸை கட்டுப்படுத்த அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2.5 பில்லியன் டாலர்கள் அவசர நிதி ஒதுக்கீடு கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பொது வெளியில் கொரோனா வைரஸ் பரவுகிறதா? தடுப்பூசிகள் மூலம் தடுக்க முடியுமா போன்றவைகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகத் தெரிய வந்துள்ளது. இதற்கான முதற்கட்ட தொகை தான் இந்த தொகை, மேலும் கூடுதல் பணம் தேவைப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

http://www.A1TamilNews.com

From around the web