சென்னையில் கொரோனா சித்த மருத்துவ மையங்கள் மேலும் அதிகரிக்கப்படும்! சென்னை மாநகராட்சி ஆணையர்!

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க மாநில அரசு பல்வேறு தடுப்பு முறைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. மண்டலம் வாரியாக மருத்துவ முகாம்களை அமைத்து வீடு வீடாக பரிசோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கவும் மருத்துவ மையங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை ஜவகர் பொறியியல் கல்லூரி, வைஷ்ணவா கல்லூரி மற்றும் அம்பேத்கர் கல்லூரி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் சிகிச்சை
 

சென்னையில்  கொரோனா சித்த மருத்துவ  மையங்கள் மேலும் அதிகரிக்கப்படும்! சென்னை மாநகராட்சி ஆணையர்!சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க மாநில அரசு பல்வேறு தடுப்பு முறைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. மண்டலம் வாரியாக மருத்துவ முகாம்களை அமைத்து வீடு வீடாக பரிசோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கவும் மருத்துவ மையங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை ஜவகர் பொறியியல் கல்லூரி, வைஷ்ணவா கல்லூரி மற்றும் அம்பேத்கர் கல்லூரி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் சிகிச்சை பெறுபவர்களுக்கு சித்த மருத்துவத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

‘கொரோனா சிகிச்சையில் சித்த மருத்துவம் நல்ல பலன் அளித்துள்ளது. சிகிச்சை அடைந்த அனைவரும் குணமடைந்து வருகின்றனர். இறப்பு எதுவும் இதுவரை இல்லை. 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் சித்த முறை மருத்துவத்தில் குணமடைந்து வருகின்றனர்.

இந்த சிகிச்சை மையங்களை அலோபதி மருத்துவர்களும் மேற்பார்வை செய்து ஏற்றுக் கொண்டுள்ளனர். சென்னையில் தற்போது மூன்று இடங்களில் மட்டுமே இந்த சித்த மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.

இது போல் கொரோனா சித்த மருத்துவ மையங்கள் விரைவில் மேலும் அதிகரிக்கப்பட உள்ளன. இது குறித்து சுகாதாரத் துறையுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது’ என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web