லேசான தும்மல், இருமல் வந்தாலே கொரோனா பயமா! தினசரி இதை ஃபாலோ பண்ணுங்க!

சாதாரணமாக தும்மல், இருமல் வந்த உடனே நமக்கும் கொரோனா வந்துடுமோ என்கிற பயம் இப்போது உருவாவது இயற்கை தான். சளி, இருமல், தும்மல் வந்தால் வீட்டில் சில கைவைத்தியங்களின் மூலமாக சரி செய்து விடலாம். சளிக்கு நம் முன்னோர்கள் மேற்கொண்ட சில அற்புத கை வைத்தியங்கள்! ஒரு டம்ளர் தண்ணீரில் சாதாரண டீத்தூளைப் போட்டு ஐந்து மிளகை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து,பனங்கற்கண்டு சேர்த்து,பால் சேர்க்காமல் குடித்தால் அது தான் மிளகு டீ. இந்த டீயில் விட்டமின்
 

லேசான தும்மல், இருமல் வந்தாலே கொரோனா பயமா! தினசரி இதை ஃபாலோ பண்ணுங்க!சாதாரணமாக தும்மல், இருமல் வந்த உடனே நமக்கும் கொரோனா வந்துடுமோ என்கிற பயம் இப்போது உருவாவது இயற்கை தான்.

சளி, இருமல், தும்மல் வந்தால் வீட்டில் சில கைவைத்தியங்களின் மூலமாக சரி செய்து விடலாம். சளிக்கு நம் முன்னோர்கள் மேற்கொண்ட சில அற்புத கை வைத்தியங்கள்!

ஒரு டம்ளர் தண்ணீரில் சாதாரண டீத்தூளைப் போட்டு ஐந்து மிளகை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து,பனங்கற்கண்டு சேர்த்து,பால் சேர்க்காமல் குடித்தால் அது தான் மிளகு டீ. இந்த டீயில் விட்டமின் சி அதிகமாக உள்ளது. இது சாதாரண சளியில் இருந்து உடனடியாக நிவாரணம் அளிக்கும்.

ஒரு டம்ளர் பசும்பாலில் 4 அல்லது 5 பூண்டு பற்கள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அதில் அரை தேக்கரண்டி மஞ்சள், தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். சளி அதிகமாக இருந்தால் காலை, இரவு என இரண்டு வேளை இந்தப் பாலை தினமும் குடிக்க வேண்டும். இப்படி பருகுவது இயற்கையாகவே நம் உடம்பினுள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

ஒரு டம்ளர் நீரில் சிறிது துளசி இலைகள், சிறு துண்டு இஞ்சி சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். பின்பு வடிகட்டி ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடித்து விட வேண்டும். சளி பிடித்தவர்கள் தினமும் இரண்டு வேளைகள் குடித்து வர இருமல் உடனே சரியாகும்.

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கி, அதில் ஐந்து சொட்டுக்கள் யூகலிப்டஸ் ஆயில் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து ஆவி பிடிக்க வேண்டும்.

A1TamilNews.com

From around the web