மொபைல் போன்களால் பரவும் கொரோனா தொற்று! அதிர்ச்சி ரிப்போர்ட்!

உலகம் முழுவதும் கொரோனாத் தொற்று ஜெட் வேகத்தில் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. சர்வதேச அளவில் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். பொழுது போக்கு எதுவும் இல்லாத சூழ்நிலையில் 24 மணிநேரமும் கைகளிலேயே இருக்கும் செல்போன் பற்றி செய்யப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. உலக அளவில் செல்போன்களில் இருக்கும் கிருமிகள் குறித்து, 24 நாடுகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில் கொரோனா வைரஸ் தொற்று செல்போன்கள் மூலமாகவும் பரவ வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக ஆராய்ச்சி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பரிசோதனைக்கு
 

மொபைல் போன்களால் பரவும் கொரோனா தொற்று! அதிர்ச்சி ரிப்போர்ட்!லகம் முழுவதும் கொரோனாத் தொற்று ஜெட் வேகத்தில் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. சர்வதேச அளவில் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். பொழுது போக்கு எதுவும் இல்லாத சூழ்நிலையில் 24 மணிநேரமும் கைகளிலேயே இருக்கும் செல்போன் பற்றி செய்யப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

உலக அளவில் செல்போன்களில் இருக்கும் கிருமிகள் குறித்து, 24 நாடுகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில் கொரோனா வைரஸ் தொற்று செல்போன்கள் மூலமாகவும் பரவ வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக ஆராய்ச்சி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 64% செல்போன்கள் நோய்க்கிருமிகளின் புகலிடமாகவும், கைகளால் தொடமுடியாத அளவு அசுத்தத்துடனும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மொபைல்போன்களில் ஸ்டாஃபிலோகோக்கஸ், ஈகோலி கிருமிகள் அதிக அளவில் காணப்படுகின்றன.

அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவிக் கொண்டிருந்தாலும், மொபைல்போன்களை தொட்டவுடனே மறுபடியும் கைகளில் கிருமிகள் குடியேற வாய்ப்புக்கள் அதிகம் எனவும் அந்த ஆய்வறிக்கை முடிவுகள் தெரிவிக்கின்றன.

செல்போன்களை பயன்படுத்தும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டியது அவசியம் எனவும், கிருமி நாசினி மூலம் அடிக்கடி மொபைல் போன்களை சுத்தம் செய்யவேண்டும் எனவும் வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

A1TamilNews.com

From around the web