அதிர்ச்சி…! தி.மு.க எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி!!

தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், அதிர்ச்சி செய்தியாக நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் வரிசையாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக முதல்வர் எடியூரப்பா என்று வரிசையாக கட்சித் தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், நேற்று காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில், மயிலாடுதுறை தொகுதி
 

மிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், அதிர்ச்சி செய்தியாக நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் வரிசையாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக முதல்வர் எடியூரப்பா என்று வரிசையாக கட்சித் தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், நேற்று காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில், மயிலாடுதுறை தொகுதி தி.மு.க. எம்.பி. சே.ராமலிங்கத்திற்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, தனிமைப்படுத்தப்பட்ட அவர், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். ஏற்கனவே தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், எம்.பி.க்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

A1TamilNews.com

From around the web