தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு!

ஒரே குழுவைச் சார்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் டாக்டர்.பீலா ராஜேஷ் கூறியுள்ளார். இந்த எட்டு பேரும், ஈரோட்டில் கொரோனோ தொற்று கண்டுபிடிக்கப்பட்டு அரசு கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வரும் தாய்லாந்தைச் சேர்ந்த இருவருடன் தொடர்பு கொண்டவர்கள் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் சென்னை, ஈரோடு, மதுரை மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான நேரடி பார்வையாளர்கள் களப்பணியில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கானவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறி தெரிகிறதா என்ற சோதனையில்
 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு!ஒரே குழுவைச் சார்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் டாக்டர்.பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.

இந்த எட்டு பேரும், ஈரோட்டில் கொரோனோ தொற்று கண்டுபிடிக்கப்பட்டு அரசு கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வரும் தாய்லாந்தைச் சேர்ந்த இருவருடன் தொடர்பு கொண்டவர்கள் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் சென்னை, ஈரோடு, மதுரை மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான நேரடி பார்வையாளர்கள் களப்பணியில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கானவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறி தெரிகிறதா என்ற சோதனையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்துறை, உள்ளாட்சித் துறை, மின்சாரத்துறை என முக்கிய துறைகளைச் சார்ந்த அமைச்சர்கள், செயலாளர்கள் கலந்து பேசி ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த இத்தகைய நேரடி களப்பணி உதவியாக இருக்கும் என்று கூறிய டாக்டர்.பீலா ராஜேஷ், தமிழ்நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக மட்டுமே செயல்படுத்தப்படும் மருத்துவமனைகளை பட்டியலிட்டார்.

இன்றைய புதிய கொரோனோ நோயாளிகளுடன் சேர்த்து 50 பேர் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

A1TamilNews.com

From around the web