கொரோனா முதல் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் உள்ளது! இந்திய ஆராய்ச்சியாளர்கள் தகவல்!

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவிற்கான தடுப்பூசி கண்டறிய பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் என்ற தடுப்பூசி கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான மனிதர்கள் மீது செலுத்தும் முதல்கட்ட பரிசோதனை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மனித சோதனைக்கு 3,500 தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. செலுத்தப்பட்டவர்களிடம் நல்ல முன்னேற்றம் தெரிவதாக எய்ம்ஸில் உள்ள சமூக மருத்துவ மையத்தின் பேராசிரியரும், ஆய்வின் முதன்மை ஆய்வாளருமான சஞ்சய் ராய் தெரிவித்துள்ளார். இதுவரை
 

கொரோனா  முதல் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் உள்ளது! இந்திய ஆராய்ச்சியாளர்கள் தகவல்!லக நாடுகள் அனைத்தும் கொரோனாவிற்கான தடுப்பூசி கண்டறிய பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் என்ற தடுப்பூசி கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கான மனிதர்கள் மீது செலுத்தும் முதல்கட்ட பரிசோதனை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மனித சோதனைக்கு 3,500 தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செலுத்தப்பட்டவர்களிடம் நல்ல முன்னேற்றம் தெரிவதாக எய்ம்ஸில் உள்ள சமூக மருத்துவ மையத்தின் பேராசிரியரும், ஆய்வின் முதன்மை ஆய்வாளருமான சஞ்சய் ராய் தெரிவித்துள்ளார். இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் உடல்நிலை சீராக உள்ளது. பக்க விளைவுகள் எதுவும் இதுவரை காணப்படவில்லை.

இருந்தாலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். கோவாக்ஸின் முதல் கட்ட மனித பரிசோதனையில் நல்ல பலன் அளிக்கிறது எனவும் இந்த தடுப்பூசி பரிசோதனையின் முதல் கட்டத்தில் 18-55 வயதுடைய எந்தவிதமான நோயுற்ற நிலைமைகளும் இல்லாமல் உள்ள ஆரோக்கியமான நபர்கள் மீது பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web