உதயநிதி ஆதரவாளரும் பாண்டே ஆதரவாளரும் இணையத்தில் சந்தித்த போது!

என்ன ப்ரோ… உதயநிதிக்கும் திமுகவுக்கும் சப்போர்ட் பண்றீங்க ? என்ன ப்ரோ பண்றது? நீங்க மாரிதாஸ் வீடியோக்களில் மயங்கறீங்க. பாண்டே சொல்வதை வேத வாக்காக நம்பறீங்க. கலைஞரைத் திட்ட மதனும், மாரிதாஸும் கை கோர்த்தால் விசில் அடிக்கறீங்க. பெரியார் ரெண்டாம் கல்யாணம் பண்ணார்ன்னு சொல்லி அவரைப் பாலியல் குற்றவாளி ஆக்கறீங்க. அம்பேத்கர் சொன்னது எல்லாமே சரியான்னு சட்டம் பேசறீங்க. எடப்பாடி சாமி ஓரளவுக்கு நல்லாத்தான் பண்றார்ன்னு சான்றிதழ் தறீங்க. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஒரே ஒரு நல்லதைக் கூட
 

உதயநிதி ஆதரவாளரும் பாண்டே ஆதரவாளரும் இணையத்தில் சந்தித்த போது!என்ன ப்ரோ… உதயநிதிக்கும் திமுகவுக்கும் சப்போர்ட் பண்றீங்க ?

என்ன ப்ரோ பண்றது? நீங்க மாரிதாஸ் வீடியோக்களில் மயங்கறீங்க. பாண்டே சொல்வதை வேத வாக்காக நம்பறீங்க.

கலைஞரைத் திட்ட மதனும், மாரிதாஸும் கை கோர்த்தால் விசில் அடிக்கறீங்க. பெரியார் ரெண்டாம் கல்யாணம் பண்ணார்ன்னு சொல்லி அவரைப் பாலியல் குற்றவாளி ஆக்கறீங்க. அம்பேத்கர் சொன்னது எல்லாமே சரியான்னு சட்டம் பேசறீங்க. எடப்பாடி சாமி ஓரளவுக்கு நல்லாத்தான் பண்றார்ன்னு சான்றிதழ் தறீங்க.

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஒரே ஒரு நல்லதைக் கூட பண்ணாத பாரதிய ஜனதாவை ஒரு கேள்வியும் கேக்க மாட்டேங்கறீங்க. ஜி தான் சரி என்று இன்னிக்கும் கம்பு சுத்தறீங்க. ஆறுதல் சொல்லிட்டு வந்து, தொடர்ந்து குரல் கொடுத்துட்டு இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு இ – பாஸ் எப்படி கிடைத்தது என்று கேள்வி கேட்கும் சீமானை ஆதரிக்கிறீங்க.

இதெல்லாம் சின்ன விஷயம். பெருசாக்கக் கூடாதுன்னு சொல்லும் பாஜக தலைவர் பத்தி எதுவும் சொல்லவே மாட்டேங்கறீங்க. இவ்ளோ பண்ற நீங்க ஒன்னு லூஸா இருக்கணும். இல்லன்னா, அயோக்கியனா இருக்கணும். இப்படி உங்களை மாதிரி இருக்கறதுக்கு பதிலா உதயநிதியை ஆதரிச்சிட்டு போயிடலாம் ப்ரோ.

என்ன இருந்தாலும் வாரிசு அரசியல் ப்ரோ…

ப்ரோ, அடுத்து நான் வேற சில கேள்விகளைக் கேட்பேன் ப்ரோ. ஆனா அதுக்கு நேரடியா , சரியான பதில்களைச் சொல்ல உங்களால முடியாது ப்ரோ. நான் கடுப்பாகி திட்டுவேன் ப்ரோ. அப்பறம் நீங்க என்னை ஒரு சர்வாதிகாரின்னு சொல்வீங்க ப்ரோ. கேள்வி கேட்டா ப்லாக் பண்ணிட்டாருன்னு சொல்வீங்க ப்ரோ. அதனால மூடிட்டு நானே போயிடுறேன் ப்ரோ.

– கணேசன் அன்பு

A1TamilNews.com

From around the web