உ.பி.யில் காங்கிரஸ் தனித்துப் போட்டி.. ராகுல் காந்தி அதிரடி முடிவு!

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியும் பகுகுண் கட்சியும் கூட்டணி உடன்பாடு செய்து கொண்ட நிலையில், காங்கிரஸ் கட்சி அங்கே தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அகிலேஷ் யாதவும் மாயாவதியும் கூட்டணி அமைத்து 78 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும், ராகுல் காந்தி சோனியா காந்தி போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் போட்டியிடப்போவதில்லை என்றும் அறிவித்தனர். நாடு முழுவதும் மெகா கூட்டணி அமைத்து பாஜகவை வீழ்த்த ராகுல் காந்தி வியூகம் அமைத்து வரும் நிலையில், அகிலேஷ், மாயாவதியின் திடீர்ப்பாசப் பிணைப்பு ராகுலுக்கு உடன்பாடாக இல்லை.
 
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியும் பகுகுண் கட்சியும் கூட்டணி உடன்பாடு செய்து கொண்ட நிலையில், காங்கிரஸ் கட்சி அங்கே தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
 
அகிலேஷ் யாதவும் மாயாவதியும் கூட்டணி அமைத்து 78 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும், ராகுல் காந்தி சோனியா காந்தி போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் போட்டியிடப்போவதில்லை என்றும் அறிவித்தனர். நாடு முழுவதும் மெகா கூட்டணி அமைத்து பாஜகவை வீழ்த்த ராகுல் காந்தி வியூகம் அமைத்து வரும் நிலையில், அகிலேஷ், மாயாவதியின் திடீர்ப்பாசப் பிணைப்பு ராகுலுக்கு உடன்பாடாக இல்லை.
 
காங்கிரஸை கழட்டிவிட்டு, பின்னர் குறைந்த எண்ணிக்கையில் சீட் ஒதுக்கலாம் என்பது அவர்கள் திட்டமாக இருந்திருக்கக்கூடும். ஆனால், ராகுல் அதற்கு சட்டை செய்யாமல் தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளார்.
 
லக்னோவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், உ.பி. மாநில காங்கிரஸ் கட்சிப் பொறுப்பாளருமான குலாம் நபி ஆசாத், உ.பி.யில் உள்ள 80 பாராளுமன்றத் தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடும். 2009 தேர்தலில் பெற்ற வெற்றியை விட இரண்டு மடங்கு வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார். 2009 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளை வென்றிருந்தது.
 
உ.பி. காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மகிழ்ச்சியாகவே உள்ளனர். மெகா கூட்டணியில் 25 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் நிலை இருந்தது. இப்போது 80 தொகுதிகளிலும் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளதால் கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார்.
 
அதே சமயத்தில், பாஜகவை தோற்கடிக்க விரும்பும் கட்சிகளை அணியில் சேர்த்துக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார். பாஜகவுக்கு தேசிய அளவில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாலும், மும்முனைப் போட்டி என்றாலும் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 
அஜீத் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளம்,  நிஷாத் கட்சி போன்ற பிற கட்சிகள் காங்கிரஸ் பக்கம் திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த தேர்தலில் பாஜகவும், பகுகுண் சமாஜ் கட்சியும் கூட்டணி வைத்ததால் தான் 73 இடங்களை அவர்கள் பெற முடிந்தது.
 
“பகுகுண் சமாஜ் கட்சி இப்போது சமாஜ்வாடி கட்சியுடன் சேர்ந்து விட்டதால், பாஜகவின் எப்படியும் உ.பி.யில் தோற்று விடும், சமாஜ்வாடி, பகுகுண் சமாஜ் கட்சியுடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைத்துக் கொள்ளலாம். எனவே தனித்துப் போட்டியிட்டு பலப்பரிட்சை பார்த்து விடலாம்,” என்பது ராகுலின் திட்டமாக உள்ளது.
 
கடைசி நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளாவது ஒதுக்கப்பட்டால், மெகா கூட்டணி உருவாகும் வாய்ப்பும் உள்ளது.
 
– வணக்கம் இந்தியா

From around the web