கர்நாடகாவில் மீண்டு வருமா காங்கிரஸ்!

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் வாக்குகளின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.தேர்தலுக்கு முன்பு பாஜகவுக்கு 106 எம்எல்ஏக்களின் (105 பாஜக+ஒரு சுயேச்சை) ஆதரவு இருந்தது. 5-ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலில் 6 இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே எடியூரப்பா அரசு பிழைக்கும் என்ற நிலையில் இருந்தது.12 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக ஆட்சியை தக்க வைத்து கொண்டது. காங்கிரசால் 2 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது. தேவகவுடாவின் மஜதவோ ஒரு தொகுதிகளில் கூட வெற்றி
 

கர்நாடகாவில் மீண்டு வருமா காங்கிரஸ்!ர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் வாக்குகளின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.தேர்தலுக்கு முன்பு பாஜகவுக்கு 106 எம்எல்ஏக்களின் (105 பாஜக+ஒரு சுயேச்சை) ஆதரவு இருந்தது. 5-ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலில் 6 இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே எடியூரப்பா அரசு பிழைக்கும் என்ற நிலையில் இருந்தது.12 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக ஆட்சியை தக்க வைத்து கொண்டது. காங்கிரசால் 2 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது. தேவகவுடாவின் மஜதவோ ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறவில்லை.

5ம் தேதி நடைபெற்ற தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களையே 13 தொகுதிகளில் பாஜக களமிறக்கியது. சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா அனைத்து தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள், ஆடு, கோழி போல் விற்பனையாகி விட்டனர். குதிரை பேரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சிறந்த பாடம் புகட்டுங்கள் என்று கடும் விமர்சனத்துடன் பிரச்சாரம் செய்தார்.

ஆனால் எடியூரப்பா, தகுதி நீக்க எம்எல்ஏக்களை வெற்றி பெற வைத்தால் அனைவரையும் அமைச்சராக்குவோம் சம்பந்தப்பட்ட தொகுதிகளின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என்று தொகுதியை பற்றியே பேசியே வெற்றியை தக்க வைத்துக் கொண்டார்.

கர்நாடகவில் காங்கிரசின் தோல்விக்கு காரணம் கட்சிக்குள் கட்டுக்கோப்பும், ஒற்றுமையும் இல்லாததே என்று மூத்த அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

https://www.A1TamilNews.com

From around the web