சுயபரிசோதனை செய்யும் காங்கிரஸ் கட்சி! உண்மைகளை போட்டுடைத்த எம்.பி.க்கள்!!

நடப்பு அரசியல் நிலவரம் பற்றி ஆலோசிக்க காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி.க்கள் காணொளி கூட்டம் நடந்தது. கட்சி செயல்பாடு, ஒருங்கிணைப்பின்மை பற்றி குற்றம் சாட்டிய முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல், கட்சி சுயசோதனை செய்துகொள்ளவேண்டும் என்றார். மன்மோகன்சிங் ஆட்சியின் 2 வது பருவ [2009 -2014 ] தவறுகள் தான் ஆட்சி பறிபோனதற்கு காரணம் என்று புதிய எம்.பி. ராஜீவ் சதாவ் குறைகூறினார். உட்கட்சி அமைப்பு வலுவாக இல்லாததால் தான் மோடி அரசின் குறைபாடுகளை மக்களிடம் எடுத்து
 

சுயபரிசோதனை செய்யும் காங்கிரஸ் கட்சி! உண்மைகளை போட்டுடைத்த எம்.பி.க்கள்!!நடப்பு அரசியல் நிலவரம் பற்றி ஆலோசிக்க காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி.க்கள் காணொளி கூட்டம் நடந்தது. கட்சி செயல்பாடு, ஒருங்கிணைப்பின்மை பற்றி குற்றம் சாட்டிய முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல், கட்சி சுயசோதனை செய்துகொள்ளவேண்டும் என்றார்.

மன்மோகன்சிங் ஆட்சியின் 2 வது பருவ [2009 -2014 ] தவறுகள் தான் ஆட்சி பறிபோனதற்கு காரணம் என்று புதிய எம்.பி. ராஜீவ் சதாவ் குறைகூறினார். உட்கட்சி அமைப்பு வலுவாக இல்லாததால் தான் மோடி அரசின் குறைபாடுகளை மக்களிடம் எடுத்து விளக்க முடியவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கவலை தெரிவித்தார்.

உடனடியாக அதை மறுத்த பொது செயலாளர் கே.சி. வேணுகோபால், மாநிலத் தலைவர்களுடனும்  எம்.பி.க்களுடனும் நடத்திய டிஜிட்டல் பிரச்சாரம், கூட்டம் பற்றி தெரிவித்தார்.பதிலடியாக பிஹார் தலைவர் அகிலேஷ் பிரதாப்  சிங் எழுந்து, வேணுகோபால் கருது கேரளாவுக்கு மட்டுமே பொருந்தும். பீகார், உ.பி. மாநிலங்களில் அப்படி இல்லை என மறுத்தார்.

ராமர் கோவில் கட்ட பூஜை பற்றி காங்கிரஸ் தலைவர்கள் மிகவும் கவனமாகக் கருத்து கூறவேண்டும்.காரியக்கமிட்டி  அதை வரவேற்றுள்ளது. வில்லங்கமான கருத்துக்களை வெளியிடக்கூடாது. அது மக்கள் நம்பிக்கை பொறுத்த விஷயம்  என ஹரியானா எம்.பி. பூபேந்தர் ஹூடா  எச்சரித்தார். 

மோடி அரசு அறிவித்த புதிய தேசியக் கல்வி கொள்கை பற்றி கவனமாக கருத்து வெளியிட வேண்டும் என மூத்த தலைவர் அஹமது படேல் உஷார் படுத்தினார். உள்ளூர் கட்சி அமைப்புகளில் இல்லாதவர்களை,  பாராசூட்டில் கொண்டுவந்து அகில இந்திய காரிய கமிட்டி உறுப்பினர் ஆக்குவதை பஞ்சாப் ஷம்ஸேர் சிங் துள்ளோ ஆட்சேபித்தார். 

கூட்டத்தில்    முன்னாள் பிரதமர்  மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ் கலந்து கொண்டனர். 2009 -2014 ஆட்சி பற்றிய விமர்சனம்  மன்மோகன் சிங்குக்கு  ரசிக்கவில்லை. 

சிதம்பரம் கூறியது நூற்றுக்கு நூறு உண்மையே. இதுவரை கட்சிக்காரர்களுக்கே அறிமுகம் இல்லாத ஆசாமிகள் காரியக்கமிட்டியில் நுழைந்து விடுவதும் வழக்கமானதே. கபில் சிபல், சிதம்பரம், பூபேந்தர் ஹூடா. அஹமது படேல்  அமெச்சூர் அரசியல்வாதிகள் அல்ல. காங்கிரஸ் வளர்ச்சி விரும்பிகள் தான்.  சுதந்திரமாக வெளியிடப்பட்ட கருத்துக்களை ஏற்று நடவடிக்கை எடுப்பது தான் காங்கிரஸ் வளர்ச்சிக்கு வழி.

– வி.எச்.கே. ஹரிஹரன் 

A1TamilNews.com

From around the web