“தேர்தலுக்கு செலவு செய்த தொகையில் பாதியையாவது வெள்ள நிவாரணத்திற்கு கொடுங்க” – காங்கிரஸ் கோரிக்கை!

டெல்லி: கேரளா, அசாம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையைக் கையாள்வதில் மத்திய அரசு மெத்தனப் போக்கை கையாள்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜவீர் ஷேர்கில் கூறுகையில், “மத்திய அரசு, வெள்ள நிவாரணப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு இருப்பதை போல் போக்கு காட்டி வருகிறது. பாதிப்படைந்த மாநிலங்களுக்கு தேவைக்கேற்ப நிவாரணம் நிவாரண உதவிகள் செய்ய வேண்டும். சென்ற ஆண்டு, கேரளாவில் வெள்ளம் ஏற்பட்ட போது சேதத்தை மறுசீரமைப்பு செய்ய 10
 

டெல்லி: கேரளா, அசாம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையைக் கையாள்வதில் மத்திய அரசு மெத்தனப் போக்கை கையாள்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜவீர் ஷேர்கில் கூறுகையில், “மத்திய அரசு, வெள்ள நிவாரணப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு இருப்பதை போல் போக்கு காட்டி வருகிறது. பாதிப்படைந்த மாநிலங்களுக்கு தேவைக்கேற்ப நிவாரணம் நிவாரண உதவிகள் செய்ய வேண்டும்.

சென்ற  ஆண்டு, கேரளாவில் வெள்ளம் ஏற்பட்ட போது சேதத்தை மறுசீரமைப்பு செய்ய 10 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்பட்டது. ஆனால் பாஜக அரசு 3 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே வழங்கியது.  எந்த பாதிப்பும் இல்லா ல்லாத உத்தரப் பிரதேசத்திற்கு 200 கோடியும், 350 கோடி தேவைப்பட்ட அஸ்ஸாமிற்கு 250 கோடி ரூபாயையும் ஒதுக்கினார்கள். தேவையில்லாத அரசியல் விளம்பரத்தை விட்டு விட்டு, இப்பொழுது கேரள தேவையை பிரதமர் நிறைவேற்ற வேண்டும்.

தேசிய பேரிடர் மீட்புக் குழு நிதியை அசாம் வெள்ள பேரிடர்களின் போது மத்திய அரசு அளிக்கவில்லை. தேர்தலுக்கு செலவு செய்த பாதி அளவு தொகையையாவது பேரிடர் நிவாரண நிதியாக அளிக்க வேண்டும்.

9 மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு  மத்திய அரசு என்னனென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது, வெள்ள மேலாண்மை திட்டம் என்ன என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல்- ஜூலை மாதங்களில், ஒவ்வொரு நாளும் ஐந்து பேராவது மழை வெள்ளத்தால் மரணம் அடைவதாக அரசு அறிகையே கூறுகிறது. ஆனால், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்த இடர்பாடுகளை குறித்து அரசு தரப்பு விவாதிப்பதில்லை”, என்று குற்றம் சாட்டினார்.

நாடு முழுவதும் பல மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழு,  இந்திய ராணுவம் , கடற்படை, விமானப்படை மற்றும் பிற நிறுவனங்கள்  மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

– வணக்கம் இந்தியா

From around the web