‘மோடியுடன் வந்த கருப்புப் பெட்டி தனியார் காரில் சென்ற மாயம் என்ன?’ – காங்கிரஸ் புகார்!

டெல்லி: பிரதமர் மோடி வந்து இறங்கிய ஹெலிகாப்டரில் இருந்து இரண்டு கருப்புப் பெட்டிகள் தனியாக ஒரு காரில் ஏற்றப்பட்டு அனுப்பப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் சித்ரதுர்க்கா நகருக்கு பிரச்சாரம் செய்ய ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார் பிரதமர் மோடி. பாதுகாப்பு வளையத்தில் உள்ள காரில் ஏறி அவர் சென்று விட்டார். அவர் வந்து இறங்கிய ஹெலிகாப்டரிலிருந்து இரண்டு கருப்புப் பெட்டிகள் இறக்கப்
 

டெல்லி: பிரதமர் மோடி வந்து இறங்கிய ஹெலிகாப்டரில் இருந்து இரண்டு கருப்புப் பெட்டிகள் தனியாக ஒரு காரில் ஏற்றப்பட்டு அனுப்பப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்க்கா நகருக்கு பிரச்சாரம் செய்ய ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார் பிரதமர் மோடி. பாதுகாப்பு வளையத்தில் உள்ள காரில் ஏறி அவர் சென்று விட்டார். அவர் வந்து இறங்கிய ஹெலிகாப்டரிலிருந்து இரண்டு கருப்புப் பெட்டிகள் இறக்கப் பட்டுள்ளது. பாதுகாப்பு வாகனங்களில் ஏற்றப்படாமல், தனியாக இருந்த ஒரு காரில் ஏற்றப்பட்டு அந்த கார் மாயமாக மறைந்து சென்று விட்டது.

பிரதமர் வந்திறங்கிய அரசு ஹெலிகாப்டரிலிருந்து இறக்கப்பட்ட பெட்டிகள் எப்படி பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே சென்றது. அங்கே நின்றிருந்த கார் யாருடையது?. பெட்டியுடன் அந்த கார் எங்கே சென்றது?. பெட்டியில் இருந்த பொருட்கள் என்ன? ஏன் பிரதமருடன் அந்தப் பெட்டி செல்லவில்லை? என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது காங்கிரஸ் தரப்பு.

அந்தப் பெட்டியை கண்டுபிடிக்குமாறும், அந்தப் பெட்டிக்குள் என்ன இருந்தது என்று பிரதமர் மோடியிடம் விசாரித்து தெரியப்படுத்துமாறும் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா டெல்லியில் செயதியாளர்களிடம் தெரிவித்தார்.

– வணக்கம் இந்தியா

From around the web