ரபேல் விவகாரம் – சிஏஜியிடம் விசாரணை நடத்த காங்கிரஸ் முறையீடு

டெல்லி : காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது, தேசத்தின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இந்திய விமான படைக்கு ரபேல் ஜெட் போர் விமானங்கள் வாங்குவதற்காக அரசு விதிகளை பின்பற்றி உலக அளவில் டெண்டர் கோரப்பட்டு ஒரு விமானம் ரூ.526 கோடிக்கு வாங்குவது என முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் 2014-ல் பா.ஜ.க.வின் மோடி அரசு பொறுப்பேற்றதும் சில விதிகளை மீறி பிரான்ஸ் அரசுடன் ஒரு விமானத்தின் விலையை ரூ.1,670 கோடி என நிர்ணயித்து ஒப்பந்தம் போட்டதில்
 

ரபேல் விவகாரம் – சிஏஜியிடம் விசாரணை நடத்த காங்கிரஸ் முறையீடு

டெல்லி : காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது, தேசத்தின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இந்திய விமான படைக்கு ரபேல் ஜெட் போர் விமானங்கள் வாங்குவதற்காக அரசு விதிகளை பின்பற்றி உலக அளவில் டெண்டர் கோரப்பட்டு ஒரு விமானம் ரூ.526 கோடிக்கு வாங்குவது என முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் 2014-ல் பா.ஜ.க.வின் மோடி அரசு பொறுப்பேற்றதும் சில விதிகளை மீறி பிரான்ஸ் அரசுடன் ஒரு விமானத்தின் விலையை ரூ.1,670 கோடி என நிர்ணயித்து ஒப்பந்தம் போட்டதில் ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே வார்த்தைப்போர் முற்றியுள்ளது. இந்த நிலையில், ரபேல் விவகாரத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரிக்க வலியுறுத்தி மத்திய தணிக்கை வாரியத்திடம் (சிஏஜி) மனு அளிக்க இன்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

– வணக்கம் இந்தியா

From around the web