விரைவில் வருகிறது Offline டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை! ரிசர்வ் வங்கி முடிவு!!

சமீப காலமாக பணபரிவர்த்தனையில் இந்தியா டிஜிட்டல் தளத்திற்கு மாறி வருகிறது. இந்த வளர்ச்சியில் இருக்கும் பெரிய குறைபாடாக இணைய இணைப்பு இருந்தால் மட்டுமே பணபரிவர்த்தனை செய்யப்படும் என்பதே பலரின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. தேவையான நேரங்களில் இணைய இணைப்பில் ஏற்படும் குறைபாடுகளால் பணப்பரிவர்த்தனை செய்ய தடையாக உள்ளது. இதை நிவர்த்தி செய்யும் வகையில் தற்போது ரிசர்வ் வங்கி offline மூலமாக பண பரிவர்த்தனை செய்ய அழைப்பு விடுத்துள்ளது. இந்த வகையில் வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத, தொலைநிலை
 

விரைவில் வருகிறது Offline டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை! ரிசர்வ் வங்கி முடிவு!!மீப காலமாக பணபரிவர்த்தனையில் இந்தியா டிஜிட்டல் தளத்திற்கு மாறி வருகிறது. இந்த வளர்ச்சியில் இருக்கும் பெரிய குறைபாடாக இணைய இணைப்பு இருந்தால் மட்டுமே பணபரிவர்த்தனை செய்யப்படும் என்பதே பலரின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

தேவையான நேரங்களில் இணைய இணைப்பில் ஏற்படும் குறைபாடுகளால் பணப்பரிவர்த்தனை செய்ய தடையாக உள்ளது. இதை நிவர்த்தி செய்யும் வகையில் தற்போது ரிசர்வ் வங்கி offline மூலமாக பண பரிவர்த்தனை செய்ய அழைப்பு விடுத்துள்ளது.

இந்த வகையில் வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத, தொலைநிலை அல்லது அருகாமையில் செலுத்துதலுக்கான அட்டைகள், பணப்பைகள் அல்லது மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தி ஆஃப்லைன் கட்டண தீர்வுகளை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் குறைந்த தொகையை பரிவர்த்தனை செய்ய முடியும். debit/credit கார்டுகளைப் பயன்படுத்தி ஆஃப்லைன் பயன்முறையில், அட்டை தரவு மற்றும் பரிவர்த்தனையின் விவரங்கள் terminal எனப்படும் பரிவர்த்தனை முனையத்தில் சேமிக்கப்படும்.

பின்னர் இது ஒரு ரசீதை உருவாக்க தரவு உள்ளிட்ட பரிவர்த்தனை ரெசிப்ட்டை உருவாக்குகிறது. இந்த வகையில் தற்போது offline mode-ல் debit/credit, wallet மற்றும் மொபைல் சாதனங்கள் மூலம் ஆஃப்லைன் செலுத்துதலுக்கான விருப்பத்தை வழங்குவது டிஜிட்டல் வசதியை மேம்படுத்தி வருகிறது. அதற்கான முயற்சிகளை ஊக்குவித்து வருகிறது.

A1TamilNews.com

From around the web