வருகிறது You Tube, Facebook , Twitter போன்ற சமூக வலைத்தளங்களுக்கு தணிக்கை வாரியம்! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

தமிழகத்தில் சமீப காலமாக கந்த சஷ்டி கவசம் மற்றும் வனிதா விஜயகுமார் திருமணம் ஆகியவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையானது இதை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவில் , கொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்டு வரும் தொடர் ஊரடங்கு காரணமாக பெரும்பாலானவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனாலேயே வீட்டிலிருந்த படியே அவர்களின் பொழுதுபோக்கிற்காக பல்வேறு சர்ச்சைக்குரிய வீடியோக்கள் பதிவிடப்பட்டு
 

வருகிறது You Tube, Facebook , Twitter  போன்ற சமூக வலைத்தளங்களுக்கு தணிக்கை  வாரியம்! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!மிழகத்தில் சமீப காலமாக கந்த சஷ்டி கவசம் மற்றும் வனிதா விஜயகுமார் திருமணம் ஆகியவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையானது இதை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவில் , கொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்டு வரும் தொடர் ஊரடங்கு காரணமாக பெரும்பாலானவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனாலேயே வீட்டிலிருந்த படியே அவர்களின் பொழுதுபோக்கிற்காக பல்வேறு சர்ச்சைக்குரிய வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் கோடிக்கணக்கான நுகர்வோர் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வரும் போதிலும் , இதுவரை அதற்கென எந்தவித தணிக்கை முறையும் வகுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்படங்களை தணிக்கை செய்வதை போல சமூக வலைதளங்களை தணிக்கை செய்யவும் தனி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவிற்கு மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web