கொரோனா ஒழிப்புப் பணியில் கல்லூரி மாணவர்கள்!

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக பொதுமக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காக கல்லூரி மாணவர்கள் களம் இறங்க உள்ளார்கள். முதற்கட்டமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் தலைமையில், மாநகராட்சி கமிஷனர் விசாகன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன், மதுரை ராஜாஜி மருத்தவமனை டீன் சங்குமணி, மன நல மருத்துவர் ராமசுப்பிரமணியன், பேராசிரியர் கண்ணன்
 
கொரோனா ஒழிப்புப் பணியில் கல்லூரி மாணவர்கள்!கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக பொதுமக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காக கல்லூரி மாணவர்கள் களம் இறங்க உள்ளார்கள்.
 
முதற்கட்டமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் தலைமையில், மாநகராட்சி கமிஷனர் விசாகன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன், மதுரை ராஜாஜி மருத்தவமனை டீன் சங்குமணி, மன நல மருத்துவர் ராமசுப்பிரமணியன், பேராசிரியர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆன்லைன் மூலம் பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். 
“சமுதாய பங்களிப்பு என்ற வகையில் மாணவர்களை கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.  முதலில் மாணவர்களை இதற்காக தயார்ப்படுத்தும் பணியில் காணொலி காட்சி மூலம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் செல்லமுத்து அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது.
 
மதுரை மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரம் மாணவர்கள் கொரோனா விழிப்புணர்வு பணியில் ஈடுபட உள்ளனர். கொரோனா பரவுதலை தடுப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். முதலில் 552 மாணவ- மாணவிகளுக்கு பேராசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. மருத்துவ வல்லுனர்களும் மாணவர்களிடம் எடுத்துரைப்பார்கள்.
 
கொரோனா நோய் குறித்து மாணவர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். சான்றிதழ் பெற்ற மாணவர்கள் கொரோனா வைரஸ் பற்றி முழுமையான புரிதலோடு இருப்பார்கள். சமூக இடைவெளி, கை கழுவும் பழக்கம், கிருமி நாசினி தெளித்தல் போன்றவற்றின் முக்கியத்துவத்தை மாணவர்கள் மக்களுக்கு எடுத்துரைப்பார்கள்,” என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
 
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இது குறித்து நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இந்தப் பணியில் கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்தும் முயற்சி வரவேற்கத்தக்கது.
 

From around the web