கோவையில் காய்கறி மொத்த மார்க்கெட் மூடப்பட்டது! விலை உயரும் அபாயம்!!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் போன்று கோவையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் 150-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனி பஸ் நிலையம் எதிரில் இந்த காய்கறி மொத்த மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. கேரள மாநிலத்திற்கு தேவையான பெரும்பாலான காய்கறிகள் இங்கிருந்து தான் செல்கிறது கொரோனா பரவலை தொடர்ந்து இட நெருக்கடி காரணமாக எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் 112 கடைகளும், அதற்கு எதிரில் உள்ள பஸ் நிலையத்தில் 35 கடைகளும் செயல்பட்டு வந்தன. எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் 3
 

கோவையில் காய்கறி மொத்த மார்க்கெட் மூடப்பட்டது! விலை உயரும் அபாயம்!!சென்னை கோயம்பேடு மார்க்கெட் போன்று கோவையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் 150-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன.

மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனி பஸ் நிலையம் எதிரில் இந்த காய்கறி மொத்த மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. கேரள மாநிலத்திற்கு தேவையான பெரும்பாலான காய்கறிகள் இங்கிருந்து தான் செல்கிறது  கொரோனா பரவலை தொடர்ந்து இட நெருக்கடி காரணமாக எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் 112 கடைகளும், அதற்கு எதிரில் உள்ள பஸ் நிலையத்தில் 35 கடைகளும் செயல்பட்டு வந்தன.

எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பொது மக்களுக்கு நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் எம்.ஜி.ஆர். காய்கறி மொத்த மார்க்கெட் கேட்டை மாநகராட்சி பணியாளர்கள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

மார்க்கெட்டில் இருப்பு வைக்கப்பட்டிருந்த காய்கறி மூட்டைகளை வியாபாரிகள் லாரியில் ஏற்றி வெளியில் கொண்டு சென்று விட்டனர். அருகில் இருந்த தனியார் வாகன நிறுத்துமிடமும் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. 

மார்க்கெட் மூடப்பட்டுள்ளதால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பெரிய வெங்காயம், பீன்ஸ் போன்ற காய்கறிகள் வரத்து நின்றுவிடும். காய்கறிகளின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

A1TamilNews.com

From around the web