டீசல் வரியை குறைத்த முதல்வர்! பொது மக்கள் மகிழ்ச்சி!

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை தொடர்ந்து தினமும் பெட்ரோல் , டீசல் விலையும் போட்டி போட்டுக்கொண்டு அதிகரித்து வருகிறது. இதனால் சாமான்ய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நடுத்தர மக்களை கருத்தில் கொண்டு ஏராளமான நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு மற்ற மாநில மக்களை மட்டுமல்லாமல் முதல்வர்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. டெல்லியில் பெட்ரோலை
 

டீசல் வரியை குறைத்த முதல்வர்! பொது மக்கள் மகிழ்ச்சி!ந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை தொடர்ந்து தினமும் பெட்ரோல் , டீசல் விலையும் போட்டி போட்டுக்கொண்டு அதிகரித்து வருகிறது. இதனால் சாமான்ய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நடுத்தர மக்களை கருத்தில் கொண்டு ஏராளமான நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு மற்ற மாநில மக்களை மட்டுமல்லாமல் முதல்வர்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. டெல்லியில் பெட்ரோலை விட டீசல் விலை அதிகரித்துக் காணப்பட்ட நிலையில் தற்போது டீசலுக்கான வாட் வரியை குறைக்க டெல்லி முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.

இதன்படி டெல்லியில் டீசல் மீதான வாட் வரி 30 சதவீதத்தில் இருந்து 16.75 சதவீதமாக குறைக்கப்படும் என அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த வரி குறைப்பால் டீசல் விலை 8ரூபாய் 36 பைசா குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி வாழ் வாகன ஓட்டிகள் பெருமகிழ்ச்சியடைந்துள்ளனர்.

A1TamilNews.com

From around the web