மே 31க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா! மருத்துவ வல்லுனர்களுடன் முதல்வர் ஆலோசனை!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே31ம் தேதி வரை நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் குறித்து மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு முடிய உள்ள நிலையில் மீண்டும் ஊரடங்கை தொடர்வதைப் பற்றியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பு முறைகள் குறித்தும் ஆலோசனைக் கூட்டம் தமிழக முதல்வர் எடப்பாடி தலையில் நாளை நடைபெறும் எனத்
 

மே 31க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா! மருத்துவ வல்லுனர்களுடன் முதல்வர் ஆலோசனை!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே31ம் தேதி வரை நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் குறித்து மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு முடிய உள்ள நிலையில் மீண்டும் ஊரடங்கை தொடர்வதைப் பற்றியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பு முறைகள் குறித்தும் ஆலோசனைக் கூட்டம்  தமிழக முதல்வர் எடப்பாடி தலையில் நாளை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்குத் தளர்வில் பொதுப்போக்குவரத்து இடம்பெறுமா என்பது குறித்து ஆலோசிக்கப்படும்.  மாநிலத்தில் உள்ள கொரோனா பாதிப்பு  நிலவரம் குறித்து மருத்துவ வல்லுனர் குழு அறிக்கையும் சமர்ப்பிக்க இருக்கிறது.

தமிழகத்தில் செயல்படுத்த  வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்த முக்கிய முடிவுகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில்  எடுக்கப்படும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

A1TamilNews.com

From around the web