மீண்டும் மாநில அளவில் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறதா? முதலமைச்சர் ஆலோசனை!!

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பிற மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டுமா? அல்லது மாநிலம் முழுவதுமே முழு ஊரடங்கு மீண்டும் தேவைப்படுமா? என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேற்று முன் தினம் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, எப்படி இதை கட்டுப்படுத்துவது என்பற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த நிலையில் தமிழக அரசின் தலைமைச்
 

மீண்டும் மாநில அளவில் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறதா? முதலமைச்சர் ஆலோசனை!!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பிற மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டுமா? அல்லது மாநிலம் முழுவதுமே முழு ஊரடங்கு மீண்டும் தேவைப்படுமா? என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 

நேற்று முன் தினம் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, எப்படி இதை கட்டுப்படுத்துவது என்பற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். 
 
இந்த நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார். கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சில அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் மாவட்ட கலெக்டர்களுக்கு சுட்டிக்காட்டி இருக்கிறார். 
 
அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் காலை 10 மணிக்கு இந்த கூட்டம் தொடங்க உள்ளது. தலைமை செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தும் இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்களும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் கலந்துகொள்கின்றனர்.
 
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருடன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.
 
கூடுதல் மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுமா அல்லது மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்று இன்று பிற்பகலில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

From around the web