ட்விட்டரில் வரும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ட்விட்டர் மூலம் வரும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இடும்பாவனம் கார்த்தி என்பவர் நரிக்குறவர்கள் உணவின்றி தவிப்பதாக முதலமைச்சரின் ட்விட்டருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதைப் பார்த்து, “அவர்களின் ஒருவரின் தொலை பேசி எண்ணை பகிருங்கள். அந்த பகுதியில் இருக்கும் மக்களுக்கு தேவையான உணவு பொருட்களை உடனடியாக கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். நன்றி,” என்று ட்விட்டரில் பதிலளித்து உள்ளார் முதலமைச்சர். பின்னர் இடும்பாவனம் கார்த்தி, உணவில்லாமல் பாதிக்கப்பட்டவர்களின்
 

ட்விட்டரில் வரும் புகார்களுக்கு உடனுக்குடன்  நடவடிக்கை எடுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!ரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ட்விட்டர் மூலம் வரும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

இடும்பாவனம் கார்த்தி என்பவர் நரிக்குறவர்கள் உணவின்றி தவிப்பதாக முதலமைச்சரின் ட்விட்டருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதைப் பார்த்து, “அவர்களின் ஒருவரின் தொலை பேசி எண்ணை பகிருங்கள். அந்த பகுதியில் இருக்கும் மக்களுக்கு தேவையான உணவு பொருட்களை உடனடியாக கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். நன்றி,” என்று ட்விட்டரில் பதிலளித்து உள்ளார் முதலமைச்சர்.

பின்னர் இடும்பாவனம் கார்த்தி,  உணவில்லாமல் பாதிக்கப்பட்டவர்களின் செல்போன் எண்களை பகிர்ந்துள்ளார். அரசு தரப்பில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது வரையிலும் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்காக, பொதுமக்களிடம் அவர் மீதான மதிப்பு உயர்ந்து வருவதை காண முடிகிறது. 

A1TamilNews.com

From around the web