மதியம் 1 மணிக்குள்ளே மளிகை வாங்கிட்டு வீட்டுக்கு வந்துடுங்க – முதலமைச்சர் உத்தரவு!

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேலும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த, அத்தியாவசிய பொருட்களை வாங்க அனுமதிக்கப்பட்டிருந்த கால அளவை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையாக குறைத்து புதிய உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. முன்னதாக, மதியம் 2.30 மணி வரையிலும் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். மக்கள் நடமாட்டத்தை மேலும் கட்டுப்படுத்த, அத்தியாவசிய
 

மதியம் 1 மணிக்குள்ளே மளிகை வாங்கிட்டு வீட்டுக்கு வந்துடுங்க – முதலமைச்சர் உத்தரவு!கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேலும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த, அத்தியாவசிய பொருட்களை வாங்க அனுமதிக்கப்பட்டிருந்த கால அளவை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையாக குறைத்து புதிய உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

முன்னதாக, மதியம் 2.30 மணி வரையிலும் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

மளிகை, காய்கறி, மீன், கிடாக்கறி வாங்க வெளியே போயிருப்பவர்கள் மதியம் ஒரு மணிக்குள் வீட்டுக்கு வந்துடுங்கப்பா. விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்த இக்கட்டான சூழலில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினர், மக்களின் அவசரகால உதவிகளுக்காக களம் இறங்கியுள்ள பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள், நோய்த்தடுப்புக்காக போராடி வரும் மருத்துவத்துறை டாக்டர்கள், மக்கள் நலப் பணியாளர்களை நினைச்சுப் பாருங்க.

அரசு நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

A1TamilNews.com

 

From around the web