நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் 10 சவரன் நகையை திருடிய இளைஞர் கைது

 
Soori

மதுரையில் நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் தங்க நகையை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில், கடந்த 9-ம் தேதி நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமண விழா நடைபெற்ற நிலையில், மணமகள் அறையில் வைக்கப்பட்டிருந்த 10 சவரன் தங்க நகை திருடு போனது.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய கீரைத்துறை போலீசார், திருமண விழாவில் பதிவு செய்த வீடியோக்கள் மற்றும் மண்டபத்திலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தேடி வந்தநிலையில் பரமக்குடியை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞனை கைது செய்தனர்.

அவனிடம் இருந்து 10 சவரன் நகை மீட்கப்பட்டுள்ள நிலையில், விக்னேஷ் இதுபோன்று பல்வேறு சுப நிகழ்ச்சிகளில் டிப் டாப் உடையணிந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

From around the web