உங்கள் அப்பாவின் ஆசி உங்களுக்கு வெற்றியை பரிசளிக்கும்... விஜய் வசந்துக்கு வாழ்த்து சொன்ன வெங்கட் பிரபு!

 
உங்கள் அப்பாவின் ஆசி உங்களுக்கு வெற்றியை பரிசளிக்கும்... விஜய் வசந்துக்கு வாழ்த்து சொன்ன வெங்கட் பிரபு!

கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளர் விஜய் வசந்துக்கு இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி நாடாளுமன்றம் உறுப்பினர் எச்.வசந்தகுமாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, கடந்த ஆண்டு அவர் மறைந்தார். இதையடுத்து கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

வசந்த குமார் மறைவை தொடர்ந்து முழு நேர அரசியலில் களமிறங்கிய நடிகர் விஜய் வசந்த் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார்.

பாஜகவை சேர்ந்த பொன். ராதாகிருஷ்ணன் தொடர்ந்து கன்னியாகுமரி தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஜய் வசந்த் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். நடிகர் விஜய் வசந்த் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அப்பா வசந்த குமார் மறைவுக்கு பிறகு முழு நேர அரசியல்வாதியாக மாறிய விஜய் வசந்த் கன்னியாகுமரி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டார். தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், 76,607 வாக்குகள் பெற்று விஜய் வசந்த் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் வசந்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பதிவில், “மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரரே.. உங்கள் அப்பாவின் ஆசி உங்களுக்கு வெற்றியை பரிசளிக்கும்” என்று வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.

From around the web