விஜய் பட இயக்குநரின் புதிய படத்தில் விமல்..!!

 
Vimal-new-movie

ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் விமல் நடிக்கும் புதிய படத்தின் பூஜை நேற்று நடைப்பெற்றது.

பகவதி, குத்து, ஏய், மாஞ்சா வேலு, வாத்தியார் போன்ற பல படங்களை இயக்கியவர் ஏ.வெங்கடேஷ். அதுமட்டுமில்லாமல் அங்காடித் தெரு, அசுரன் போன்ற படங்களின் மூலம் நடிகராகவும் ரசிகர்களுக்கு பரீட்சையமானர்.

வி.பழனிவேல் தயரிப்பில் ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ரஜினி’. இதில் விஜய் சத்யா, ஷெரின், சம்யுக்தா பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் வெங்கடேஷ் இயக்கத்தில் விமல் நடிக்கும் புதிய படத்தையும் பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறார்.

ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு புதிய பேய்ப் படத்தில் விமல் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் தம்பி ராமைய்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இப்படத்துக்கு அம்ரீஷ் இசையமைக்கிறார்.

இந்தப் படம் குறித்து ஏ. வெங்கடேஷ் கூறியுள்ளதாவது,

நான் இயக்கும் முதல் பேய் படம் இது. முற்றிலும் மாறுபட்ட இதுவரை யாரும் பார்த்திராத ஒரு வித்தியாசமான திகில் படமாக இது இருக்கும். தமிழ் சினிமாவில் எத்தனையோ பேய் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இது வழக்கமான பேய் படம் அல்ல. பயமுறுத்தும் காட்சிகள் இருந்தாலும் நகைச்சுவைக்கு முக்கியத்தும் கொடுத்து ஜனரஞ்சகமான படமாக இதை உருவாக்கி வருகிறேன்.

விஜய் சத்யா நடிப்பில் நான் இயக்கிய ‘ரஜினி’ படப்பிடிப்பிற்கு ஒருநாள் தயாரிப்பாளரை பார்க்க விமல் வந்தார் அப்போது நான் இந்த படத்தின் ஒன்லைனை சொன்னவுடன் அங்கேயே தங்கி முழு கதையையும் கேட்டார். உடனடியாக கதை மிகவும் அற்புதமாக இருக்கிறது. உடனே படப்பிடிப்பை துவங்கிவிடலாம் என்று சொல்லிவிட்டார். நாங்களும் உடனே அதற்கான வேலைகளை துவங்கி விட்டோம். மற்ற நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு துவங்கி ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டுளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

From around the web