பிரபல நடிகை ரம்யா பாண்டியனுக்கு திருமணமா..? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த புகைப்படம்..!

 
RamyaPandiyan

திருமண கோலத்தில் ரம்யா பாண்டியன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

ரம்யா பாண்டியன் 2015-ம் ஆண்டு டம்மி டப்பாசு திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்குள் நடிகையாக அறிமுகமானவர். இவர் குறும்படங்களில் நடித்து நடிகையாக அறிமுகமானவர்.

இவர் ஜோக்கர், டம்மி டப்பாசு, ஆன் தேவதை திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பவர்.

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த இவர் தற்போது சூர்யாவின் தயாரிப்பில் ஒரு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா பாண்டியன் திருமணக் கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ரம்யா பாண்டியனுக்கு திருமணம் ஆயிடுச்சா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இது ஒரு திரைப்படத்தின் காட்சி புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web