படப்பிடிப்பின் இடையே விஜய்-சூர்யா திடீர் சந்திப்பு..! நடந்தது என்ன?

 
Vijay-Suriya

நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவின் சமீபத்திய திடீர் சந்திப்பு தான் தற்போதைய முக்கிய செய்தியாக உள்ளது.

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் செல்வராகவன், யோகி பாபு, பூஹா ஹெக்டே, விடிவி கணேஷ், ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், அன்குர் அஜித் விகால் உள்ளிட்டோர்  நடித்து வருகிறார்கள்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பெருங்குடியில் உள்ள சன் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது.

அதே சன் ஸ்டூடியோவில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பும் நடைபெற்று வந்தது. இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதால் இரண்டு படங்களின் படப்பிடிப்பும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சன் ஸ்டூடியோவில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில்  படப்பிடிப்பு இடைவேளையின் போது  விஜய்யும் சூர்யாவும் சந்தித்துள்ளனர். அப்போது ஜெய் பீம் திரைப்படம் குறித்து சூர்யாவிடம் விஜய் பேசியதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் இருவரும் இணைந்து மதிய உணவு சாப்பிட்டிருக்கிறார்கள். இது தனிப்பட்ட சந்திப்பு என்பதால் புகைப்படங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.

From around the web