ஷாருக்கான் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய்..?

 
SRK-Vijay

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் நடிகர் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் அறிமுகமான அட்லி, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என அடுத்தடுத்து மூன்று விஜய் படங்களை இயக்கி கோலிவுட்டில் முன்னணி இயக்குநர் பட்டியலில் இடம் பிடித்தார். இந்நிலையில்தான் பாலிவுட் வாய்ப்பு அட்லிக்கு வந்தது.

‘மெர்சல்’ படத்தைப் பார்த்து அட்லிக்கு ஓகே சொன்ன ஷாருக்கானுக்கு, கிட்டத்தட்ட இதேபோன்று டபுள் ஆக்‌ஷன் படத்தை இயக்குகிறார் அட்லி. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் சான்யா மல்ஹோத்ரா, பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் புனேவில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவின.

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் இந்தியா முழுக்க வெளியாகவுள்ளது. தென்னிந்திய மொழிகளில் நடிகர் விஜய் மிகவும் பிரபலமானவர் என்பதால், நடிகர் விஜய் நடித்தால் இந்தப் படத்தின் வியாபாரத்துக்கு அது பெரிதும் உதவும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் படத்தில் ஷாருக்கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் பரவியது. பின்னர் அந்த தகவல் உண்மையில்லை என தெரியவந்தது. இந்த முறையாவது ஷாருக்கான் - விஜய் நடிக்கவிருப்பதாக வெளியான தகவல் உண்மையாக இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

From around the web